விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய அமைச்சகம் யாரிடம் உள்ளது தெரியுமா?

Narendra Modi Cabinet: நரேந்திர மோடி மூன்றாவது முறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேலும் மோடியின் புதிய அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2024, 06:51 AM IST
  • மோடி 3.0 அமைச்சரவையில் மொத்தம் 72 பேர்.
  • பலர் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
  • சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய அமைச்சகம் யாரிடம் உள்ளது தெரியுமா? title=

Narendra Modi Cabinet: மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் பாஜக பெரும்பான்மையை இழந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். மேலும் அமைச்சர்களின் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், திங்கட்கிழமை யார் யாருக்கு எந்த எந்த துறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு முறை ஆட்சியில் இருந்த பாஜக அமைச்சரவையை விட இந்த முறை கூடுதல் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த முறைக்கு மொத்தம் 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். 

மேலும் படிக்க | மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்... யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!!

முக்கிய துறைகள் யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை ஆகிய அமைச்சகத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி அமித்ஷா உள்துறை அமைச்சராகவும், ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், ஜெய் ஷங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். அதே சமயம் கடந்த முறை அமைச்சராக இருந்த சிலருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், விவசாயம், ஜவுளித்துறை, வீட்டுவசதித்துறை, கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய அமைச்சகம் தற்போது யாரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விவசாயத்துறை

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விவசாயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மத்திய பாஜக அரசுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே விவசாயம் தொடர்பான சட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக இருந்த போது ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். இவருக்கு கூடுதலாக கிராமப்புற வளர்ச்சி அமைச்சகமும் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி அமைச்சகம்

இரண்டு முறை ஹரியானா முதல் அமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கூடுதலாக எரிசக்தி அமைச்சகமும் வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிட்டு 2,32,577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மனோகர் லால்.

ஜவுளி அமைச்சகம் 

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஜவுளித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த கிரிராஜ் சிங் ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு கிரிராஜ் சிங் பீகார் அமைச்சரவையில் கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துள்ளார். கடந்த முறை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பதவி வகித்தார்.

கல்வி அமைச்சகம்

மோடி 3.0 ஆட்சியில் கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்த சமயத்தில் உஜ்வாலா யோஜனா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி முடித்து இருந்தார். 

சுகாதாரத்துறை

முன்னாள் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரசாயனம் மற்றும் உரங்கள் துறையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நட்டா 2014ல் சுகாதார அமைச்சராக இருந்துள்ளார்.

மேலும் படிக்க | PM Modi: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து... எதற்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News