உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம்!

அமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

Last Updated : Apr 21, 2019, 11:37 AM IST
உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம்! title=

அமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்றான ஃபார்ட்டுயூன், ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தலைசிறந்த தலைவர்களின் டாப் 50 பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 

அதில், கோவையை சேர்ந்த பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45-வது இடத்தை பிடித்துள்ளார். இவர், ஏழை, எளிய பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவான விலையில் நாப்கினை தயாரித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இந்த கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு, பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அதுமட்டுமல்லாமல், இவரது வாழ்க்கைக் கதையை இந்தி திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி 'பேட்மேன்' என்கிற பெயரில் திரைப்படமாக‌ எடுத்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு (Period. End of Sentence.) 2018 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்,ஃபார்ட்டுயூன் வார இதழின் பட்டியலில் முதல் இடத்தில் வில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்சும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து, ஜெசிண்டா ஆர்டென், ராபர்ட் முல்லர், போனி மா, சத்யா நதெல்லா, கிரெட்ட துங்பெர்க், டிம் குக் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

 

Trending News