காலையில் எழுந்தவுடன் ‘இதை’ செய்யுங்கள்! வெற்றி உங்கள் வாசல் கதவை தட்டும்..

பலருக்கு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கு சில காலை பழக்கங்களை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 21, 2023, 05:09 PM IST
  • வெற்றியடைய பல வழிகள் உள்ளன.
  • காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
  • வெற்றிக்கான வழியில் செல்ல ஈசியான டிப்ஸ்!
காலையில் எழுந்தவுடன் ‘இதை’ செய்யுங்கள்! வெற்றி உங்கள் வாசல் கதவை தட்டும்.. title=

நம்மில் பலர், வாழ்வில் பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால், பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் வெற்றி அடைய வழியைத்தேடுவதற்கு பலருக்கு நேரமிருப்பதே இல்லை. வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருப்பினும் அது நமது மனதில் இருந்து ஆரம்பிக்கிறது என பலர் கூறுவதுண்டு. பல நெகடிவான எண்ணங்கள் நம் மனதில் குடி கொண்டிருந்தாலும் வெற்றிக்கான வழியை பார்ப்பது கடினமாக இருக்கலாம். இந்த எதிர்மறையான எண்ணங்களை மனதில் இருந்து அகற்ற சில வழிகள் இருக்கின்றன. இவற்றை காலையில் எழுந்தவுடன் செய்வது நல்லது. அவை என்னென்ன தெரியுமா? 

கவனத்துடன் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி:

உங்களது நாளை, மூச்சு பயிற்சியுடன் தொடங்குவது அந்த நாளையே மாற்றியமைக்க உதவுமாம். ஆழமாக மூச்சை இழுத்து விடுவது, நமக்குள் இருக்கும் இன்னொருவரை எழுப்பி விடவும் உதவலாம்.இதை செய்ய, காலையில் எழுந்தவுடன் சௌகரியமாக உங்களுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இது, உங்கள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை கொடுக்கும் ஹார்மோன்களை உடலை விட்டு வெளியேற செய்யும். 

எழுத்து வடிவில் நன்றியறிதல்:

வாழ்வில், எது நம் கையில் இருக்கிறதோ அதை வைத்து ஆனந்தமடைய வேண்டும் என சிலர் கூறுவதுண்டு. அந்த வகையில், நீங்கள் வாழ்வில் எதற்காக நன்றியுணர்வுடன் இருக்கிறீர்களோ அதை உங்கள் நாட்குறிப்பு அல்லது பிடித்த புத்தகத்தில் எழுத தொடங்குங்கள். உங்களுக்கு கிடைக்காத விஷயங்களை நினைத்து வருந்துவதை விட, கிடைத்திருக்கும் விஷயங்களை வைத்து, அதற்காக நன்றியுணர்வுடன் இருத்தல் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆரம்ப படிக்கட்டாக இருக்கும்.

மேலும் படிக்க | கல்லீரலை பத்திரமா பாத்துக்கனுமா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க போதும்!

தியான பயிற்சி:

சில நிமிடங்களாகவே இருந்தாலும், காலையில் தியானம் செய்வதை கட்டயமாக்கி கொள்ளுங்கள். இது, உங்களது மன மாற்றத்திற்கு உதவி புரியும் பெரிய திரவு கோளாக இருக்கும். இதை செய்ய, காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து, நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள், எதை அடைய நினைக்கிறீர்கள், வெற்றி அடைந்தால் என்ன செய்வீர்கள் என்று அனைத்தையும் யோசித்து பாருங்கள். இதை, ஆங்கிலத்தில் visualization என்று கூறுவர். இதனால் நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் விஷயத்தை நேரிலும் நிகழ்த்திவிட முடியும். 

டிஜிட்டல் சாதனங்கள் வேண்டாமே!

அனைவருக்கும் இருக்கும் பொதுவான பழக்கங்களுள் ஒன்று, நமக்கு என்ன மெசஜ் வந்துள்ளது, மெயில் வந்துள்ளது என்பதை பார்ப்பதுதான். அதிலும் சிலர், முழிப்பு வந்தாலும் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளாமல் மொபைலை பார்த்துக்கொண்டே சில மணி நேரங்களை படுக்கையில் கழித்து விடுவர். இது, நீங்கள் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களில் இருந்து உங்களை திசைமாற்றலாம். எனவே, காலையில் சாப்பிடுவதற்கு முன்பு போன், டிவி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பதை தவிர்க்கவும். 

நேர்மறையான வார்த்தைகள்..

ஒரு மனிதரின் சிறந்த எதிரி அல்லது சிறந்த நண்பன் வெளியில் எங்கும் இருப்பதில்லை, அவருக்குள்ளேயேதான் இருக்கிறான். ஒரு சிலர், தாங்கள் நினைத்து முடிக்க வேண்டிய விஷயங்களை செய்யவில்லை என்றாேலோ, எதிலாவது தோல்வியடைந்தாலோ தங்களை தாங்களே தாழ்த்திக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவர். இது, அவர்களது வெற்றிக்கான வழியில் தடையாக இருக்கலாம். எனவே, என்ன நடந்தாலும் நீங்கள் உங்களுக்குள் நல்ல முறையில் பேச வேண்டும். அப்படி செய்தால்தான் உங்களுக்குள் பாசிடிவான எண்ணங்களும் வளரும், வாழ்வில் விரைவாகவே வெற்றியடையலாம். 

மேலும் படிக்க | வயதானாலும் இளமையாக தெரிய வேண்டுமா? ‘இந்த’ 6 உணவுகளை சாப்பிடுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News