அன்ராயரை சிறியதாக தைத்த டெய்லர் மீது இளைஞர் வழக்கு பதிவு..!

தனது அன்ராயரை (டவுசர்) கூறிய அளவை விட சிறியதாக தைத்த டெய்லர் மீது வாடிக்கையாளர் போலீசாரிடம் புகார் கூறிய வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது...!

Last Updated : Jul 20, 2020, 12:47 PM IST
அன்ராயரை சிறியதாக தைத்த டெய்லர் மீது இளைஞர் வழக்கு பதிவு..! title=

தனது அன்ராயரை (டவுசர்) கூறிய அளவை விட சிறியதாக தைத்த டெய்லர் மீது வாடிக்கையாளர் போலீசாரிடம் புகார் கூறிய வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது...!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது.  அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், தனது அன்ராயரை (டவுசர்) கூறிய அளவை விட சிறியதாக தைத்த டெய்லர் மீது வாடிக்கையாளர் போலீசாரிடம் புகார் கூறிய வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

46 வயதான ஒருவர் போபால் காவலர்களை அணுகியுள்ளார். அப்போது அவர், ஒரு தையல்காரர் தனது உள்ளாடையை (ஜட்டி) "மிகக் குறுகியதாக" தைத்ததாக புகார் கொடுத்துள்ளார். எவ்வாறாயினும், இந்த பிரச்சினையை தீர்க்க நீதிமன்றத்திற்கு நகர்த்துமாறு கிருஷ்ணா குமார் துபே என்ற நபரை பொலிசார் கேட்டுக்கொண்டனர்.

முன்னதாக பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்த போது, மாதத்திற்கு ரூ.9,000 சம்பாதித்து வந்த துபே, இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தூண்டுதலால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக வேறுமானம் இழந்தார்.  

"நான் மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தைச் சேர்ந்தவன், அக்டோபரில் நான் ஒரு வேலைக்காக போபாலுக்கு வந்தேன். சமீபத்தில், நான் ஒரு நண்பரிடமிருந்து ரூ.1000 கடன் வாங்கி, இரண்டு உள்ளாடைகளை தைக்க இரண்டு மீட்டர் நீள துணி உட்பட பல்வேறு பொருட்களை வாங்கினேன்" என்றார் துபே. 

ALSO READ | Watch: நேரலையின் போது விழுந்த தொகுப்பாளரின் பல் செட்... அதிர்ந்து போன கேமரா மான்..!

இவற்றை பீம் நகரில் வசிக்கும் ஒரு டெய்லரிடம் ரூ.190 தையல் கூலி கொடுத்து இரண்டு உள்ளாடைகளை தைக்க கூறியுள்ளார். இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு பின் டெய்லரும் அவருக்கு உள்ளாடையை தைத்து கொடுத்துள்ளார். பின்னர் அவர் அதை அணிந்த போது இறுக்கமாக 

அவர் வேலைக்காக தையல்காரருக்கு ரூ.190 செலுத்தினார். இருப்பினும், அவரைப் பொறுத்தவரை, அவர் உள்ளாடைகளை அணிந்தபோது, அவர் மிகவும் குறுகியதாக இருந்துள்ளது. இதையடுத்து, அவர் தையல்காரரிடம் புகார் செய்துள்ளார். ஆனால், அவர் துணி போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார். நான் கடை உரிமையாளரிடம் அவர், நான் இரண்டு மீட்டர் துணியைக் உங்களிடம் கொடுத்ததாக அவர் கூறினார்," என்று அவர் மேலும் கூறினார்.

இதை தொடர்ந்து, அந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு போலீஸை அணுகினார். அவர் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும்படி கேட்டார். "நாங்கள் அவரை நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டோம்" என்று ஹபீப்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, தையல்காரர் இறுதியாக துபேயிடம் தனது பணத்தை திருப்பித் தரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

Trending News