நாடு முழுவதும் மகா சிவராத்திரியையொட்டி தமிழகத்திலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி பார்வதிதார்த்தினியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
உலக பிரசித்திப்பெற்றது பார்வதிதார்த்தினி சிவன் கோயில். பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பூஜையும் செய்யப்படுகிறது.
சுவாமி வீதி உலாவில் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்தும் கோலாட்டம் ஆடியபடியும் கலந்துகொண்டனர். இதையடுத்து, காலை பார்வதிதார்த்தினி சிவன் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்துக்கு பால், இளநீர், தயிர் உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
#TamilNadu: Devotees in large numbers participated in the Annual Silver Chariot Procession of Lord Ramanathaswamy & Goddess Parvathavarthini at Ramanathaswamy Temple ahead of #MahaShivRatri festival in Rameswaram. (13.2.2018) pic.twitter.com/Od9AESof7u
— ANI (@ANI) February 14, 2018
இதேபோல், சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலம் என அழைக்கப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய என கோஷம் எழுப்பினர்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் நான்கு யாக பூஜைகள் நடைபெற்றன. மார்த்தாண்டம் அருகேயுள்ள திருநட்டாலத்தில் உள்ள கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் சிவனை தரிசனம் செய்தனர்.