புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரப்படி, புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு போன்றவற்றின் காரணியான புதன் கிரகம் மார்ச் 18ம் தேதி கும்ப ராசியில் அஸ்தமித்துள்ளது. இதற்குப் பிறகு, 2022 மார்ச் 24 அன்று புதன் ராசியை மாற்றப் போகிறார். மார்ச் 24ல் புதன் மீன ராசிக்குள் நுழைகிறார். சூரியக் கடவுள் ஏற்கனவே இருக்கும் இடத்தில். சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புத்தாதித்ய யோகம் உருவாகும். புதனின் ராசி மாற்றத்தால் சில ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய யோகத்தால் மன அமைதி கெடும். அத்தகைய சூழ்நிலையில், மன அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் சிறப்பான மாற்றம் ஏற்படும். நிதி இழப்பு ஏற்படலாம். வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண வேண்டும்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
கடகம்
நம்பிக்கை குறையலாம். கோபத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். வேலையில் வெளி நபர்களை நம்ப வேண்டாம். நிதி முதலீட்டில் இழப்பு ஏற்படலாம். புதன் மாறும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
மிதுனம்
புதனின் இந்த ராசி மாற்றம் மிதுன ராசியினருக்கு சாதகமாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
துலாம்
புதனின் ராசி மாற்றத்தால் குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும். ராசி மாற்றத்தின் போது மனதில் சலசலப்பு இருக்கலாம். மேலும், உடல்நலம் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்பு ஏற்படலாம்.
விருச்சிகம்
புதனின் ராசி மாற்றத்தால் மனம் சிதறும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் வேலை கிடைக்கும். குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். நீங்கள் சில நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். புதன் சஞ்சாரத்தின் போது பொறுமையாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR