LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 14.2 எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய விலையில் அரசாங்கம் வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக செலுத்தப்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2021, 02:25 PM IST
  • COVID-19 நிவாரணத் தொகுப்பின் ஒரு பகுதியாக அரசாங்கம் இலவச சிலிண்டர்களை வழங்கியது.
  • உங்கள் மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிட்டதா என பார்ப்பது மிக எளிது.
  • சில நிமிடங்களில் இதை தெரிந்துகொண்டு விடலாம்.
LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம் title=

LPG Subsidy: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதிலும் போடப்பட்ட ஊரடங்கில் நுகர்வில் அதிகரிப்பைக் காட்டிய ஒரே எரிவாயு வீட்டு சமயல் எரிவாயுவான LPG மட்டும்தான். கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இது 2.16 மில்லியன் டன் என்ற அளவில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. எனினும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.5 சதவிகிதம் குறைவாக இருந்தது. கோவிடுக்கு முந்தைய 2019 மே மாதத்தைப் பார்த்தால், இது 5.5 சதவிகிதம் அதிகமாக உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. 

COVID-19 நிவாரணத் தொகுப்பின் ஒரு பகுதியாக அரசாங்கம் இலவச சிலிண்டர்களை வழங்கியது இதற்குக் காரணமாகும்.

அனைத்து எல்பிஜி வாடிக்கையாளர்களும் சந்தை விலையில் இதை வாங்க வேண்டும். இருப்பினும், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 14.2 எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய விலையில் அரசாங்கம் வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக செலுத்தப்படும். திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) வாடிக்கையாளர்களுக்கு அரசாங்கம் மானியத்தை வழங்குகிறது, பொதுவாக, LPG விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி திருத்தப்படுகின்றன.

தங்கள் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். ஐ.ஓ.சி.எல் (IOCL), ஹெச்பி மற்றும் பிபிசிஎல் போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உங்கள் எரிவாயு மானியத்தின் நிலையை எவ்வாறு பார்ப்பது என்பதை இங்கே காணலாம். ஒருங்கிணைந்த இணையதளத்தில் எல்பிஜி மானிய நிலையை ஆன்லைனில் எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை இந்த வழியில் தெரிந்து கொள்ளலாம். 

உங்கள் LPG ஐடி தெரியாவிட்டால் என்ன செய்வது?

1. உங்கள் LPG ஐ.டி உங்களுக்கு தெரியவில்லை என்றால், உங்கள் 17 இலக்க எல்பிஜி எண்ணுக்குக் கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.

2. ஒரு நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்படுவீர்கள்
 
3. மூன்று ஆப்ஷன்களிலிருந்து, நீங்கள் பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் அல்லது இந்தேனை தேர்வு செய்யலாம்
 
4. பின்னர் நீங்கள் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்
 
5. புதிய பக்கத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆப்ஷனைப் பொறுத்து, சில விவரங்களை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்

ALSO READ: இலகு ரக Smart LPG சிலிண்டரை அறிமுகம் செய்தது IOCL: இதன் சிறப்புகள், நன்மைகள் இதோ

6. உங்கள் தொலைபேசி எண், உங்கள் விநியோகஸ்தரின் பெயர், உங்கள் நுகர்வோர் எண் ஆகிய விவரங்கள் கேட்கப்படும்.
 
7. நீங்கள் ஒரு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்

உங்கள் LPG ஐடி தெரிந்திருந்தால், நீங்கள் இந்த வழியை பின்பற்றலாம் (ஹெச்பி வலைத்தளத்தின் செயல்பாட்டைப் பார்க்கலாம்) 

1. Http://mylpg.in/ க்குச் செல்லவும்
 
2. இப்போது வழங்கப்பட்ட இடத்தின் வலது புறத்தில் உங்கள் LPG ஐடியை உள்ளிடவும்
 
3. ​​நீங்கள் எந்த OMC LPG ஐப் பயன்படுத்தினாலும், உங்கள் பயனர் விவரங்களை நிரப்ப வேண்டும்.

4. இந்த படத்தைப் பார்க்கவும்
 

1. 17 இலக்க LPG ஐடியை உள்ளிடவும்.

 
2. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் விவரங்களை நிரப்பவும்
 
3. கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தொடரவும்
 
4. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள்
 
5. அடுத்த பக்கத்தில், உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு கடவுச்சொல்லை உருவாக்கவும்
 
6. உங்கள் மின்னஞ்சல் ஐடியில் ஆக்டிவேஷன் இணைப்பைப் பெறுவீர்கள்
 
7. அந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்
 
8. நீங்கள் அவ்வாறு செய்தவுடன், உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும்
 
9. இப்போது, ​​mylpg.in -ல் லாக் இன் செய்யவும்
 
10. உங்கள் LPG கணக்கில் உங்கள் வங்கி மற்றும் ஆதார் அட்டை எண் இணைக்கப்பட்டுள்ளதா என பாப் அப் விண்டோவில் குறிப்பிடவும். 
 
11. இப்போது 'Cylinder Booking History/subsidy transferred'-ஐ கிளிக் செய்து விவரத்தை பார்க்கவும்.

ALSO READ:800ரூபாய் கேஷ்பேக் உடன் LPG கேஸ் சிலிண்டர் வாங்க செம்ம வாய்ப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News