LPG Subsidy: சிலிண்டர் மானியம் வரலயா? இப்படி செக் பண்ணுங்க

Subsidy Status Check: மத்தியில் மோடி அரசு ஒரு பெரிய நடவடிக்கை எடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை பெரிய அளவில் குறைப்பதாக அறிவித்தது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2022, 07:39 AM IST
  • உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டர்
  • ரூ.200 மானியம் வழங்கப்படும்
  • இந்த மானியம் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே
LPG Subsidy: சிலிண்டர் மானியம் வரலயா? இப்படி செக் பண்ணுங்க title=

ஒரு காலத்தில் பெண்கள் உணவு சமைப்பதில் அதிக உழைப்பும் முயற்சியும் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், எல்பிஜி கேஸ் சிலிண்டர் வந்த பிறகு, பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்வடி இந்த கேஸ் சிலிண்டர் வசதி நாட்டின் அனைத்து இடங்கக்களிலும் அடைந்துள்ளது, ஆனால் கிராமத்திற்கு இந்த வசதியை அடைய பல ஆண்டுகள் ஆனது. அந்த வகையில் நாட்டின் ஏழை மற்றும் நலிந்த பொருளாதாரப் பிரிவினருக்கு எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாக இணைக்கும் திட்டத்தை மத்தியில் மோடி அரசு தொடங்கியது.

இந்த நிலையில் ஏழை மக்களுக்கு இலவசமாக இணைக்கும் இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா ஆகும். ஆனால், சில காலமாக நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் வாழ்வாதாரத்தில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, மத்திய மோடி அரசு ஒரு பெரிய நடவடிக்கை எடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பெரிய அளவில் குறைத்து அறிவித்தது. இந்த அறிவிப்புடன், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 200 ரூபாய் கூடுதல் மானியத்தையும் அரசாங்கம் அறிவித்தது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் இந்த திட்டத்தின் பயனாளியாக இருந்தால், வீட்டிலேயே உட்கார்ந்த படி, உங்கள் கணக்கில் பணம் வருகிறதா இல்லையா என்பதை ஆன்லைன் மூலமாக மிக எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். எபபடி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

எப்படி மானியம் கிடைக்கும்? எப்படி கண்டுபிடிப்பது?
* முதலில் www.mylpg.in கிளிக் செய்யவும்.
* அடுத்து வலது பக்கத்தில் கேஸ் சிலிண்டரின் புகைப்படத்தைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
* அடுத்து சேவை வழங்குநர் நிறுவனம் என்பதில் கிளிக் செய்யவும்.
* ஒரு புதிய பக்கம் இங்கே திறக்கும், அதை கிளிக் செய்யவும்.
* இங்கு சைன் இன் மற்றும் நியூ யூசர் என்ற ஆப்ஷன் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.
* ஐடி பராமரிக்கப்பட்டால், சைன் இன் என்பதைக் கிளிக் செய்யவும் இல்லையெனில் நியூ யூசர் என்பதை கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் முன் இருக்கும் சிலிண்டர் முன்பதிவு வரலாற்றைக் கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு, எந்தெந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் கிடைத்துள்ளது என்பதைச் சரிபார்க்கலாம்.
* நீங்கள் மானியம் பெறவில்லை என்றால், பீட்பேக் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* மானியம் கிடைக்காததற்கும் இங்கு புகார் அளிக்கலாம்.
* கூடுதல் தகவலுக்கு 18002333555 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

எல்லாருக்கும் கிடைக்காது?
மத்திய அரசின் இந்த மானிய அறிவிப்பு ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே அரசின் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News