LPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ

LPG சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரும் இக்கட்டான சூழலில், LPG குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பயனர்கள் விரைவில் மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான தேர்வைப் பெறுவார்கள்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2021, 01:46 PM IST
  • LPG குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
  • பயனர்கள் மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான தேர்வைப் பெறுவார்கள்.
  • நான்கு ஆண்டுகளில் 8 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
LPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ title=

LPG Cylinder Latest News: LPG சிலிண்டர்களின் விலை உயர்ந்து கொண்டே இருப்பது மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், LPG குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. LPG வாடிக்கையாளர்கள் விரைவில், மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான தேர்வைப் பெறுவார்கள். ஒரு குறிப்பிட்ட எரிவாயு வியாபாரி சரியான நேரத்தில் LPG எரிவாயு சிலிண்டரை வழங்கத் தவறிவிட்டால், அதனால் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இந்த வசதி செய்யப்படவுள்ளது. இந்த செய்தியை எண்ணெய் செயலாளர் தருண் கபூர் உறுதிப்படுத்தினார்.

LPG சமையல் எரிவாயு விலை மார்ச் 1 ம் தேதி சிலிண்டருக்கு ரூ .25 உயர்த்தப்பட்டது. சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, 14.2 கிலோகிராம் LPG சிலிண்டரின் விலை டெல்லியில் இப்போது ரூ. 819 ஆக உள்ளது.  

பிப்ரவரி 28 ம் தேதி பி.டி.ஐ-யிடம் பேசிய எண்ணெய் செயலாளர், "LPG இணைப்பை குறைந்தபட்ச அடையாள ஆவணங்களுடன் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கான இடத்திற்கான வதிவிட ஆதாரத்தை தர வெண்டும் என்ற வற்புறுத்தலும் இனி இல்லாமல் இருக்க வழிவகை செய்யப்படும். மேலும், ஒரு விநியோகஸ்தருடன் பிணைக்கப்படுவதற்குப் பதிலாக, அருகிலுள்ள மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டர் ரீஃபில்லைப் பெறுவதற்கான தேர்வு நுகர்வோருக்கு விரைவில் கிடைக்கும். இதனால், ஒரு டீலர், LPG சிலிண்டர் இல்லாததாலோ அல்லது பிற காரணங்களுக்காகவோ பயனருகு சிலிண்டர் கொடுக்க முடியாமல் போனால், மற்ற இரண்டு டீலர்களிடமிருந்து சிலிண்டரைப் பெறுவதற்கான வாய்ப்பு பயனருக்கு கிடைக்கும்.” என்று கூறினார்.

ALSO READ: LPG Cylinder டெலிவரியின் போது உங்களிடம் extra charge கேட்கப்பட்டால் இதை செய்யுங்கள்: HPCL

இதற்கிடையில், இலவச LPG இணைப்புத் திட்டம் மோடி அரசாங்கத்தின் (Modi Government) ஒரு கட்டமைப்பு சீர்திருத்தமாகும். இது உட்புற வீட்டு மாசுபாட்டை அகற்றுவதற்கும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இப்போது, ​​அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கோடி இலவச எல்பிஜி இணைப்பை வழங்கவும், நாட்டில் சுத்தமான எரிபொருளின் 100 சதவீத ஊடுருவலை அடைய சமையல் எரிவாயுவை அணுகுவதை எளிதாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில், கபூர், ஏழை குடும்ப பெண்களுக்கு வெறும் நான்கு ஆண்டுகளில் 8 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நாட்டில் எல்பிஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை சுமார் 29 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் மத்திய பட்ஜெட்டில் பிரதம மந்திரி உஜ்வாலா (PMUY) திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது.

"இந்த கூடுதல் ஒரு கோடி இணைப்புகளை இரண்டு ஆண்டுகளில் முடிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

ALSO READ:LPG சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றம் - முழு விவரம் இதோ

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News