எல்ஐசி-யில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு; 8000 காலியிடங்கள்; அக்டோபர் 1 கடைசி

நீங்களும் வேலை தேடுகிறீர்களானால், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி இருக்கிறது. எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் உதவிப்பதவிக்கு ஏராளமான காலி பணியிடங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 24, 2019, 11:12 AM IST
எல்ஐசி-யில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு; 8000 காலியிடங்கள்; அக்டோபர் 1 கடைசி title=

புதுடெல்லி: நீங்களும் வேலை தேடுகிறீர்களானால், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி இருக்கிறது. எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் உதவிப்பதவிக்கு ஏராளமான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதவிக்கு தேவையான ஆர்வம் மற்றும் தகுதி உங்களுக்கு இருந்தால் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் கேள்விகளின் வடிவம் வங்கித் தேர்வு போல இருக்கும். இந்த பதவியின் அடிப்படை ஊதிய அளவு ரூ.14435 ஆகும்.

காலியிடம் தொடர்பான முக்கிய விஷயங்கள்:
- பணியின் பெயர் - உதவியாளர்
- காலி இடங்களின் எண்ணிக்கை - 781
- தகுதி - ஏதாவது ஒரு பட்டம்
- வயது வரம்பு - 18 முதல் 30 வயது வரை
- வேலை செய்யும் இடம் - மண்டலத்தைப் பொறுத்தது

விண்ணப்பிப்பது எப்படி:
விருப்பம் உள்ளவர்கள் உதவியாளர் அல்லது கிளர்க் பதவிக்கு எல்.ஐ.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.licindia.in) மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எஸ்சி-எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு பரிவர்த்தனை கட்டணமாக ரூ.50 + விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து வகை பிரிவினருக்கும் ரூ.600 + பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும்.

நாட்களின் விவரம்:
- ஆன்லைன் பதிவு தொடங்கி நாள் - 17 செப்டம்பர் 2019
- விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் - 1 அக்டோபர் 2019
- விண்ணப்பத்தை சரிபார்க்கும் கடைசி நாள்- 1 அக்டோபர் 2019
- விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான கடைசி நாள் - 22 அக்டோபர் 2019
- ஆன்லைன் கட்டணம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - 17 செப்டம்பர் முதல் 1 அக்டோபர் 2019 வரை.

Trending News