LIC IPO: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ இன்று துவக்கம், ஆவலுடன் காத்திருக்கும் முதலீட்டாளர்கள்

LIC IPO Launch: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஆன எல்ஐசி ஐபிஓ இன்று திறக்கப்பட உள்ளது. இந்த ஐபிஓவுக்காக மக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவில் மே 9 வரை முதலீடு செய்யலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2022, 10:38 AM IST
  • எல்ஐசி ஐபிஓ-வின் பொது வெளியீடு இன்று துவங்குகிறது.
  • முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவில் மே 9 வரை முதலீடு செய்யலாம்.
  • ஐபிஓ மூலம் ரூ.21,008 கோடி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.
LIC IPO: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ இன்று துவக்கம், ஆவலுடன் காத்திருக்கும் முதலீட்டாளர்கள்  title=

எல்ஐசி ஐபிஓ புதுப்பிப்பு: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பொது வெளியீட்டுச் சலுகைக்காக (ஐபிஓ) காத்திருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி!! இன்று (மே 4ம் தேதி) அவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. எல்ஐசியின் ஐபிஓ இன்று முதல் முதன்மை சந்தையில் திறக்கப்பட உள்ளது. மே 9 வரை முதலீட்டாளர்கள் இதில் பணத்தை முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
எல்ஐசி ஐபிஓ-வின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை பிரிவு முதல் பாலிசிதாரர்கள் வரை இதில் பணத்தை முதலீடு செய்யலாம். பல்வேறு பிரிவுகளுக்கு தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரீடெயில் மற்றும் தகுதியான ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஓ மூலம் ரூ.21,008 கோடி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது 
எல்ஐசி ஐபிஓவில், அரசாங்கம் அதன் 22,13,74,920 பங்குகளை விற்கிறது. எல்ஐசி ஐபிஓவில், முதலீட்டாளர்கள் ஃபிசிக்கலாகவும் டிஜிட்டல் முறையிலும் விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். கிரே மார்கெட்டிலும் இந்த பங்கின் விலை ஏற்றத்தில் உள்ளது. இந்திய அரசு தனது ஐபிஓ மூலம் ரூ.21,008 கோடி திரட்டும் எண்ணத்தில் உள்ளது. இது முற்றிலும் 100% ஓஎஃப்எஸ் (விற்பனைக்கான சலுகை) ஆக இருக்கும்.

மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: அரசு தரப்பில் அனுப்பப்பட்ட உத்தரவு, விவரம் இதோ 

எஸ்எம்எஸ் மூலம் எல்ஐசி தகவல் கொடுத்தது
ஐபிஓவுக்கு முன், செவ்வாய்க்கிழமை எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பங்கு விற்பனை குறித்து எஸ்எம்எஸ் மற்றும் பிற வழிகளின் மூலம் தெரிவித்தது. எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு அவர்களின் மொபைல் போன்களில் அனுப்பிய செய்தியில் ஐபிஓ தொடர்பான தகவல்களைத் தெரிவித்துள்ளது.  எல்ஐசி பல மாதங்களாக இந்த ஐபிஓ பற்றிய தகவல்களை பிரிண்ட் மற்றும் டிவி சேனல்கள் மூலம் பரப்பி வருகிறது.

ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.5,627 கோடி திரட்டப்பட்டது
ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 5,627 கோடி திரட்டியுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. இதில் உள்நாட்டு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. ஒரு பங்குக்கு ரூ.949 வீதம் 5.92 கோடி பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எல்ஐசி தனது 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்கப் போகிறது. இதன் மூலம் 20,557 கோடி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | LIC IPO: நீங்கள் எல்ஐசி பாலிசிதாரரா? உங்களுக்கு உள்ளது ஐபிஓ-வில் சிறப்பு சலுகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News