LPG மானியம் வேணுமா? Aadhaar-LPG இணைப்பது முக்கியம் - 5 வழிகளில் இணைக்க முடியும்

எரிவாயு இணைப்பு (Gas connection) மற்றும் வங்கி கணக்கு (Bank Account) இரண்டையும் ஆதார் உடன் இணைப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 30, 2020, 08:40 PM IST
  • சிலிண்டர் விலை குறைந்து வருவதால், மானியம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது.
  • மானியத்தைப் பெறுவதற்கு, நீங்கள் ஆதார்-எல்பிஜி இணைப்பது முக்கியம்.
  • எரிவாயு மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரும்.
LPG மானியம் வேணுமா? Aadhaar-LPG இணைப்பது முக்கியம் - 5 வழிகளில் இணைக்க முடியும் title=

புது டெல்லி: பெரும்பாலான மக்கள் எல்பிஜி சிலிண்டர்கள் பதிவு செய்யும் போது மானியம் (LPG Subsidy) பெறுகிறார்கள். நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் மானியத்தொகை மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. ஆனால் சில மாதமாக சிலிண்டர் விலை குறைந்து வருவதால், மானியம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், எல்பிஜி மானியம் வரும் நாட்களில் தொடர்ந்து கிடைக்கும் என்று மத்திய அரசாங்கத்தின் அறிக்கை மூலம் இப்போது எதிர் பார்க்கப்படுகிறது. எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியத்தைப் பெறுவதற்கு, நீங்கள் ஆதார்-எல்பிஜி இணைப்பது (Aadhaar-LPG linking) முக்கியம். 

எரிவாயு இணைப்பு (Gas connection) மற்றும் வங்கி கணக்கு (Bank Account) இரண்டையும் ஆதார் உடன் இணைப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் எரிவாயு மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரும். ஆதார் (Aadhaar) உடன் எரிவாயு இணைப்பை இணைப்பது எப்படி என்பதைக் குறித்து பார்ப்போம். 5 வழிகளில் ஆதார் அட்டையை இணைக்க முடியும்.

ALSO READ |  உங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது?

நீங்கள் இண்டேன் எல்பிஜி எரிவாயு இணைப்பைப் பயன் படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இண்டேன் கேஸ் இணைப்பு (Indane Gas) மற்றும் வங்கிக் கணக்கை (Bank Account) ஆதார் உடன் (Aadhaar Card) இணைத்தவுடன், உங்களுக்கான எரிவாயு மானியத்தொகை உங்கள் கணக்கில் வரத் தொடங்கும்.

எரிவாயு இணைப்பை ஆதார் உடன் இணைக்க ஐந்து வழிகள் உள்ளன.

1. ஆஃப்லைன் (How to link LPG-Aadhaar offline)
2. ஆன்லைன் (How to link LPG-Aadhaar online)
3. எஸ்எம்எஸ் (How to link LPG-Aadhaar via SMS)
4. ஐ.வி.ஆர்.எஸ் (How to link LPG-Aadhaar via IVRS)
5. 5. வாடிக்கையாளர் சேவை (How to link LPG-Aadhaar via Customer care)

ALSO READ |  பிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News