ஆட்ட நாயகன் தோனிக்கும் ஐடி கம்பெனிக்கும் இவ்வளவு ஒற்றுமையா...!!!

தோனிக்கும் இன்போசிஸ் நிறுவனத்திற்கும் இடையில் பல ஆச்சர்யமான ஒற்றுமைகளை காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 10:07 PM IST
  • ஒரு கிரிக்கெட் வீரராக சர்வதேச அளவில் சாதனைகளை செய்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தவர் எம்.எஸ். தோனி.
  • இன்போசிஸ் நிறுவனம் சுமார் இரண்டரை இலட்சம் ஊழியர்களுக்கு மிகபெரும் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • தோனிக்கும் இன்போசிஸ் நிறுவனத்திற்கும் இடையில் பல ஆச்சர்யமான ஒற்றுமைகளை காணலாம்.
ஆட்ட நாயகன் தோனிக்கும் ஐடி கம்பெனிக்கும் இவ்வளவு ஒற்றுமையா...!!! title=

ஒரு கிரிக்கெட் வீரராக சர்வதேச அளவில் சாதனைகளை செய்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தவர் எம்.எஸ். தோனி. இன்போசிஸ்  நிறுவனம் சுமார் இரண்டரை இலட்சம் ஊழியர்களுடன் மிகபெரும் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்துள்ளது

1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இன்போசிஸ் இப்போது  NYSE, அதாவது நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

1981  ஜூலை 7ம் தேதி என்ற இந்த தேதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேதி எனக் கூறலாம் . இந்த தேதியில் குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகள்.

ஆம். தல தோனி என அன்பாக அழைக்கப்படும்  மகேந்திர சிங் தோனி, அன்று தான் பிறந்தார். அதே நாளில் தான் இன்போசிஸ் நிறுவனமும் உதயமானது.

தோனி ராஞ்சியில் பிறந்தார், பின்னர் இந்தியாவின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக ஆனார். மறுபுறம், இன்ஃபோசிஸ் புனேவில் நிறுவப்பட்டது. உலக அளவில் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ள இன்போசிஸ் இந்தியாவிற்கு பெருமையை தரும் அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.

தோனி மற்றும் இன்போசிஸ் இடையிலான மற்றொரு முக்கிய ஒற்றுமை மிக சாதாரண பின்னணி. சில ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட, இன்போசிஸ் 13000 கோடி டாலர் நிறுவனமாக வளர்ந்துள்ளது, இதன் சந்தை மதிப்பு சுமார் 41.14 பில்லியன் டாலர்கள்.

மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் MS Dhoni நிகழ்த்திய சாதனைகள்.. ஒரு பார்வை..!!!

கிரிக்கெட் ஆட்ட நாயகன்னாக இருக்கும், ஜார்கண்ட்  இளைஞர் மிக சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர். இவரது தனித்துவமான தலைமை பண்பு, இவரை கிரிக்கெட்டில் சிகரத்தை தொட வைத்தது. வெற்றிகளை குவித்தார். தோனி ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்த சாதாரண சிறுவன் என்ற நிலையில் இருந்து இந்திய கிரிக்கெட்டின் இதயத் துடிப்பாக மாறினார்.

மகேந்திர சிங் தோனி மற்றும் இன்போசிஸ் ஆகிய இருவருமே தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றியவர்கள். 

39 ஆண்டுகளில், தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியாவை ஒரு முக்கிய மையமாக மாற்றுவதில்  இன்போசிஸ் இன்றியமையாத பங்களித்துள்ளது. இந்தியாவில் இருந்து NASDAQ பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் ஆனது. 

கரக்பூர் ரயில் நிலையத்தில் டி.டி.இ. ஆக பணியாற்றிய எம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் சாதனையின் மூலம் ராஞ்சிக்கு பெருமை தேடித் தந்தார். 

தோனியும்  இன்போசிஸ் நிறுவனமும், மிகவும் எளிமையாக வாழ்க்கையை தொடக்கி, சவால்களை நிறைந்த வாழ்க்கையில், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சிகரத்தை அடைந்துள்ளனர், 

மேலும் படிக்க | WOW... இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் IPL லைவ் ஸ்ட்ரீமிங்கை இலவசமா பார்க்கலாம்!

Trending News