பூஜையில் தூபம், தீபம் ஏற்றுவதற்கான காரணம் என்ன தெரியுமா..!!!

கோவில் ஆனாலும் சரி,  வீட்டில் என்றாலும் சரி, தூபம் தீபம் இல்லாமல் வழிபாடு முழுமையடையாது. இது தவிர நல காரியங்கள் செய்யும் போதும் தூபம், தீபம், ஏற்றி வைக்கப்படுகின்றன.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2021, 06:38 PM IST
  • தூபம், தீபம் இல்லாமல் வழிபாடு முழுமையடையாது
  • அனைத்து தெய்வங்களுக்கும் வாசனை மிகவும் பிடிக்கும்.
பூஜையில் தூபம், தீபம் ஏற்றுவதற்கான காரணம் என்ன தெரியுமா..!!!  title=

புதுடெல்லி: பூஜை நேரத்திலும் பிரார்த்தனை செய்யும் போது மட்டுமல்லாமல், தினமும் காலையும் மாலையும் பூஜையில், ஊதுபத்திகள் கண்டிப்பாக ஏற்றப்படுகின்றன. கோவில் ஆனாலும் சரி,  வீட்டில் என்றாலும் சரி, தூபம் தீபம் இல்லாமல் வழிபாடு முழுமையடையாது. இது தவிர நல காரியங்கள் செய்யும் போதும் தூபம், தீபம், ஏற்றி வைக்கப்படுகின்றன.  

மக்கள் புனித நதிகளுக்குச் செல்லும்போது கூட விளக்கு தானம் செய்வதோடு ஊதுபத்திகளை ஏற்றி பூசி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்யப்படுவது ஏன் செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 

தூபம் , ஊதுபத்தி ஆகியவை சூழ்நிலையை  நறுமணமாகவும் புனிதமாகவும் ஆக்குகின்றன. அதனால் வழிபாட்டின் போது சூழ்நிலையில்  நறுமணமாக இருக்கும். அதனால், அருகில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்கவும் மற்றும் நேர்மறை சக்திஅயின் ஏற்படுத்தவும் தூபம், தீபம் ஏற்றப்படுகின்றன. ஊதுபத்திகளால் பரவும் நறுமணம் மனதிற்கு அமைதியை அளிக்கிறது என்பதோடு ஒரு திருப்தியான உணர்வையும் அளிக்கிறது. இந்த காரணத்திற்காக, பல வகையான மூலிகைகள் மற்றும் பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊதுபத்திகள் குச்சிகள் பூஜையின் போது பயன்படுத்தப்படுகின்றன. 

Also Read | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?

சூழ்நிலையில் மேலும் நேர்மறை ஆற்றலை உருவாக்க, கற்பூரம் வழிபாடும் செய்யப்படுகிறது. ஆரத்தியிலும் கற்பூரம் எரிக்கப்படுகிறது. கற்பூர வாசனை பல வாஸ்து குறைபாடுகளையும் நீக்குகிறது. 

இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்,தூபம், திப்பம் ஏற்றி வணங்கும் போது தெய்வங்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு விதமான வாசனை பிடிக்கும் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல், தூபம் தீபம் ஏற்றி வழிபடும் போது, கடவுள்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு அன்னை லஷ்மி  தேவிக்கு ரோஜாக்களின் நறுமணம் மிகவும் உகந்தது.  

READ ALSO | தொழில் செழிப்படைய 5 ஜோதிட பரிகாரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News