PPF vs FD: சரியான முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பது சில சமயங்களில் வரைபடம் (Map) இல்லாமல் அடர்ந்த காடுகளுக்குச் செல்வது போல் அச்சுறுத்தலான அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில், ஒருவரின் முதலீட்டு பயணத்திற்கு உதவ, இங்கு இரண்டு பிரபலமான ஆப்ஷனை நீங்கள் காணலாம். முதலாவது, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மற்றொன்று நிலையான வைப்புத்திட்டம் (FD).
வரிச் சேமிப்பு மற்றும் நீண்ட கால முதலீடு என்று வரும்போது இவை இரண்டும் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படுகிறது. இங்கே, உங்கள் நிதி இலக்குகளுடன் எது சிறப்பாகச் சீரமைக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க உதவும். PPF மற்றும் FD திட்டங்கள் குறித்து இதில் காணலாம்.
PPF திட்டத்தின் சாதகம்
PPF, அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நீண்ட கால முதலீட்டு விருப்பமாகும். அதன் பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளுக்காக இந்த திட்டம் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது எனலாம். நிதி அமைச்சகத்தால் காலாண்டு மதிப்பாய்வு செய்யப்படும் இந்த திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது.
மேலும் படிக்க | பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்: வரி விலக்குடன் பல நன்மைகள்
ஒரு PPF கணக்கின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ஐந்து வருடங்களுக்கு மேலும் நீட்டிக்கச் செய்யலாம். இது EEE அம்சத்தின் கீழ் செயல்படுகிறது. EEE வரி நிலை என்பது முதலீட்டின் போது (ஆரம்ப பங்களிப்பு), வருமானம் குவிப்பு கட்டத்தின் போது (வருமானங்கள் அல்லது சம்பாதித்த வட்டி) மற்றும் திரும்பப் பெறும் நேரத்தில் (முதிர்வு அல்லது மீட்பு) இந்த முதலீட்டை, வரிகளில் இருந்து முழு விலக்கு அளிக்கிறது. அதாவது, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது, அதில் இருந்து வட்டியை பெறும்போதும், திட்டம் முதிர்வு அடைந்து மொத்தமாக பணத்தை எடுக்கும்போதும் முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
நிலையான வைப்புத்திட்டம் (FD) என்றால் என்ன?
நிலையான வைப்புத்தொகைகள் (FD) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. FD வட்டி விகிதங்கள் நிதி நிறுவனம் மற்றும் திட்ட காலத்தின் அடிப்படையில் மாறுபடும். தற்போதைய விகிதங்கள் ஆண்டுக்கு 5.3 முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும். PPF போலல்லாமல், FD வருமானம் முற்றிலும் வரி இல்லாதது அல்ல. உங்களின் தனிப்பட்ட வரி அடுக்கின் அடிப்படையில் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். zeenews.india.com/tamil/lifestyle/high-profitable-savings-accounts-than-fd-schemes-check-these-banks-interest-rates-453060
PPF vs FD: ஓர் ஒப்பீடு
PPF மற்றும் FD ஆகியவற்றை தனித்தனியே எடுத்து பார்க்கும்போது, பல்வேறு காரணிகளையும் நாம் காண வேண்டும். நாம் வட்டி விகிதங்களைப் பார்த்தால், PPF தற்போது 7.1 சதவீத விகிதத்துடன் முன்னணியில் உள்ளது, இது பெரும்பாலான FD விகிதங்களை விட சற்று அதிகமாக உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
வரிச் சலுகைகளை பொறுத்தவரை, PPF அதன் EEE நிலையுடன் தெளிவான வகையில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், FD வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது, இது ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம். நீண்ட கால திட்டத்தில் வருமானம் ஈட்டுவதில் PPF திட்டத்தை தேர்வு செய்யலாம், அதே சமயம் FD திட்டமானது குறுகிய காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வருமானம் பெறுவதில் நெகிழ்வுத்தன்மையையும் பணப்புழக்கத்தையும் கொண்டுவருகிறது. ஏனென்றால், PPF இன் குறைந்தபட்ச முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் ஆகும், அதே நேரத்தில் FD திட்டங்கள் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் பல நெகிழ்வான ஆப்ஷன்களை வழங்குகின்றன.
PPF மற்றும் FD ஆகியவற்றிற்கு இடையே தேர்ந்தெடுப்பது உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் நிதி நோக்கங்களை சார்ந்துள்ளது. நீங்கள் வரி இல்லாத வருமானம் மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தால், PPF உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும், நீங்கள் நெகிழ்வுத்தன்மை மற்றும் பணப்புழக்கத்தை உத்திரவாதமான வருமானத்துடன் பார்க்கிறீர்கள் என்றால், FD திட்டம் உங்களுக்கு பலனளிக்கலாம். இரண்டின் நியாயமான கலவையானது உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்தவும் சமநிலைப்படுத்தவும் உதவும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிச்சது இரட்டை ஜாக்பாட்!! டிஏ உடன் இதுவும் ஏறும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ