செல்வத்துக்கு சொந்தக்காரர், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே கடன் கொடுத்த குபேரனின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள் சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். குபேரனின் அருள் இருந்தால், வற்றாத ஜீவ ஊற்றாக செல்வம் பெருகும். அது மட்டும் அல்லாமல் அது நீடித்து நிலைத்து இருக்கும்.
விரைவாக செல்வம் கிடைக்க வேண்டுபவர்கள், தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்கின்றனர். தீபாவளியன்று குபேர பூஜை செய்து செல்வத்தால் உங்கள் வீட்டை ஒளிமயமாக்குங்கள்.
மகாலட்சுமியுடன் குபேரனுக்கும் பூஜை செய்தால் செல்வம் வந்து சேரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையை தெரிந்துக் கொள்வோம்.
READ ALSO | திருமலையில் நடந்த முதல் திருமணம்
செல்வத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் பணவசதி, உடல் திடகாத்திரம், கல்வி,வியாபார விருத்தி தொழில் துறை முதலியவற்றிற்கும் அதிபதியான குபேரன், சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்ட குபேரனின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.
பத்மாவதி தாயாரை காதலித்த திருப்பதி பெருமாள், தனது திருமண செலவுக்காக செல்வத்தின் அதிபதி குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
தனது மகளை திருமணம் செய்ய பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று பத்மாவதியின் தந்தை ஆகாசராஜன் நிபந்தனை விதித்தார். மகாலட்சுமியின் அவதாரமான பத்மாவதியை திருமணம் செய்துக் கொள்வதற்கான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி பொற்காசுகளை கடன் வாங்கினார். இதற்காக கடன் பத்திரத்திலும் பெருமாள் கையெழுத்திட்டார். இந்த கடனுக்கான வட்டியை கலியுகம் முடியும்வரை கட்ட வேண்டும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே கடன் பத்திரத்தில் எழுதப்பட்ட நிபந்தனை.
அதர்மமான வகையில் சம்பாதித்த பணத்தை கோடிக்கணக்கில் பெருமாளின் உண்டியலில் காணிக்கையாக போட்டாலும், அது குபேரனுக்கு வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போரின் காணிக்கையை அசலாகவும் செலுத்தலாம் என ஏழுமலையான் முடிவு செய்தார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் குபேர காணிக்கை எனும் பெயரில் குபேரனின் கடனை அடைப்பதற்காக ஏழுமலையானுக்கு காணிக்கை தரப்படுகிறது. குபேர காணிக்கையை நிர்வகிப்பதற்கென தனி அதிகாரியை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ளது. குபேரனின் அருளைப் பெற்றால், அன்னை மகாலட்சுமியின் அருளும் கூடுதல் இணைப்பாக வந்து சேரும்.
Also Read | திருப்பதி ஏழுமலையானுக்கு வந்த காணிக்கையின் மதிப்பு தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR