Mosquito Repellent: கொசு கடியிலிருந்து தப்ப வீட்டிலேயே தயாரிக்கலாம் ‘சூப்பர்’ லோஷன்!

கொசுக் கடியிலிருந்து தப்ப, பல கிரீம்கள் மற்றும் மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்திலும் நம் உடலுக்கும் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2022, 08:39 PM IST
  • மழைக்காலத்தில் கொசுக்களால் அதிக ஆபத்து உள்ளது.
  • கொசு விரட்டி லோஷன் தயாரிப்பது எப்படி?
  • கொசுக்களிடமிருந்து பாதுகாப்பதோடு, சருமத்தை அழகாக்கும்.
Mosquito Repellent: கொசு கடியிலிருந்து தப்ப வீட்டிலேயே தயாரிக்கலாம் ‘சூப்பர்’ லோஷன்!  title=

கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க : மழைக்காலத்தில் கொசுக்களால் அதிக ஆபத்து உள்ளது. இது ஒரு சிறிய உயிரினம் என்றாலும், அது பல கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது. கொசுக்களில் பல வகைகள் உள்ளன. அவை டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா போன்ற கடுமையான நோய்களை பரப்புகின்றன. ஆனால் கொசு கடிக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், இந்த நோய்களைத் தவிர்க்கலாம். மழை மற்றும் கோடை நாட்களில் கொசுக்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கிறது, எனவே இந்த நாட்களில் அவற்றைத் தவிர்க்கும் வழிகளை அறிந்து கொள்வது அவசியம்.

கொசு விரட்டி லோஷன் தயாரிப்பது எப்படி?

பல கிரீம்கள் மற்றும் மருந்துகள் கொசுக் கடியைத் தவிர்க்கும் வகையில் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்திலும் நம் உடலுக்கும் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. கொசு உங்களை அண்டாமல் இருக்க கடையில் கிடைக்கும் கிரீம்களை விட வீட்டிலேயே தயாரிக்கும் க்ரீம் சிறப்பானது என்பதோடு பாதுகாப்பானது. வீட்டிலேயே க்ரீம் தயாரித்து கொசுக்கள் மற்றும் நோய்கள் வராமல் தடுக்கும் வழியை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கொசு விரட்ட, தேன் மெழுகிலிருந்து பெற்ற இயற்கையான கிரீம் மற்றும் லோஷனைத் தயாரிக்கலா. இதற்கு, தேன் மெழுகு - 1/4 கப், தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெய் (1/4 கப்) , பேக்கிங் சோடா (1/4 கப்), வெதுவெதுப்பான நீர் (3/4 கப்), யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் சிட்ரோனெல்லா இயற்கை எண்ணெய் (அத்தியாவசிய எண்ணெய்) தேவைப்பட்டால்.

கொசு விரட்டி லோஷன் தயாரிப்பது எப்படி?

- லோஷன் தயாரிக்க, முதலில் தேன் மெழுகிலிருந்து எடுக்கப்பட்ட தேன் மெழுகுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

- ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஸ்பூன் அல்லது பிளெண்டரின் உதவியுடன் நன்கு கலக்கவும்.

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

- இப்போது தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் மெழுகு கலவையில் அந்த தண்ணீரை சேர்க்கவும், அது சரியாக கலக்க ஒரு பிளெண்டரை பயன்படுத்தவும்.

- இப்போது இந்த கலவையை சிறிது நேரம் ஐஸில் வைக்கவும்.

- பின்னர் இதில் 10 சொட்டு யூகலிப்டஸ் மற்றும் 10 சொட்டு சிட்ரோனெல்லா எண்ணெய் கலக்கவும்.

- லாவெண்டர் அல்லது மருதாணி எண்ணெய் வாசனைக்காக சேர்க்கப்படலாம்.

- லோஷன் முழுவதுமாக குளிர்ந்த பிறகு, அதை ஒரு பாட்டில் அல்லது காற்று புகாத கொள்கலனில் வைக்கவும்.

- இந்த லோஷன் நீண்ட நேரம் வேலை செய்யும். மேலும் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பதோடு, சருமத்தை அழகாக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News