Changing petrol engine scooter to electric scooter: உங்களிடம் பெட்ரோலில் (Petrol) இயங்கும் ஸ்கூட்டர் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள மின்சார ஸ்கூட்டர்கள் (Electric Scooter) மற்றும் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள மத்தியில், பெங்களூருவில் உள்ள சில தொடக்க நிறுவனங்கள் பழைய ஸ்கூட்டர்களை மின்சார ஸ்கூட்டர்களாக மாற்ற ஒரு தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளன. இதற்கான செலவும் அதிகமில்லை
குறைந்த செலவில் அதிக லாபம்
பெங்களூருவில் சவாரி பகிர்வு சேவைகளை வழங்கும் தொடக்க நிறுவனமான பவுன்ஸ் (Bounce) இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் பழைய இண்டர்னல் கம்பஷன் என்ஜின் இயந்திரம் (பெட்ரோல் என்ஜின்) உள்ள ஸ்கூட்டரில் மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி (Retrofit Kit) பொருத்துவதன் மூலம் மின்சார ஸ்கூட்டராக மாற்றுகிறது. இதற்காக நிறுவனம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. இதன் மூலம் உங்கள் வாகன செலவு பெருமளவில் குறையும்
ALSO READ | வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்
ஒரு முறை சார்ஜ் செய்தால் ஸ்கூட்டர் எவ்வளவு காலம் நீடிக்கும்?
பவுன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் விவேகானந்த ஹல்லேகரே இது குறித்து கூறுகையில், “இதுவரை 1000 க்கும் மேற்பட்ட பழைய ஸ்கூட்டர்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக மாற்றியுள்ளோம். இந்த ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்கான சேவை மையங்களையும் நிறுவனம் திறக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் பேட்டரி கிட் மூலம், ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்த பின், ஸ்கூட்டரை 65 கிமீ வரை இயக்க முடியும். இந்த கருவிக்கு இந்திய தானியங்கி ஆராய்ச்சி கழகம் சான்றளித்துள்ளது.
ALSO READ | Ola அடுத்த அதிரடி: விரைவில் வருகிறது ஓலா மின்சார கார், விவரம் இதோ!!
உங்கள் விரும்பியபடி பெட்ரோல்/மின்சாரம் இரண்டையும் இயக்கலாம்
பவுன்ஸ் நிறுவனத்திற்கு பிறகு, பல நிறுவனங்கள் இப்போது எட்ரியோ (Etrio ) மற்றும் மெலடாத் (Meladath) ஆட்டோகாம்பொனண்ட்ஸ் போன்றவையும் இந்த பணியில் இறங்கியுள்ளன. பழைய பெட்ரோல் ஸ்கூட்டரை எளிதாக எலக்ட்ரிக்/ஹைப்ரிட் ஸ்கூட்டராக மாற்றக்கூடிய ஈஸி ஹைப்ரிட் கிட்டை சந்தையில் அறிமுகப்படுத்த மெலடாத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால், ஸ்கூட்டரை உங்கள் தேவைக்கேற்ப எந்த முறையிலும், அதாவது பெட்ரோல், மின்சாரம் ஆகிய இரண்டிலும் இயக்கலாம்.
Ola Electric Scooter vs Simple One: எந்த ஸ்கூட்டர் சிறந்தது? முழு ஒப்பீடு இதோ!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR