புதுடெல்லி: இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு காரணமாக, மக்களிடையில் நோய்களின் ஆபத்து அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு நபரும் எந்த நேரத்திலும் நோயால் பாதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.
சிறுநீரகம், இதய நோய், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட்டால், வாழ்க்கையில் நாம் சேர்த்த செல்வம் முழுதும் செலவாகிவிடும். இதைத் தவிர்ப்பதற்கு கிரிட்டிக்கல் நோய் காப்பீட்டுத் திட்டங்கள் ஒரு நல்ல வழியாகும். இந்த திட்டம் கடுமையான, ஆபத்தான நோய்களை உள்ளடக்கியது.
புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு, கட்டி, சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் இந்த பாலிசியின் உள்ளே வருகின்றன. கிரிட்டிக்கல் காப்பீட்டுத் திட்டம், அதன் கீழ் வரும் நோய்களை வரையறுக்கிறது.
இந்த பாலிசியில், காப்பீட்டுத் தொகையைப் பெற மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவ பரிசோதனையில், பாலிசியில் உள்ள தீவிர நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், காப்பீட்டு நிறுவனம் மொத்த தொகையை அளிக்கிறது. இந்த பாலிசியில், க்ளெய்மை பெற எந்த பில்கள் அல்லது ரசீதுகளையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
ALSO READ: உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் உடலில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா?
பாலிசியில் பல வகையான நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன
இந்த பாலிசியின் கீழ், புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகம், டயாலிசிஸ், பக்கவாதம், முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ஓப்பன் செஸ்ட் சிஏபிஜி, இதய வால்வு, கோமா, உறுப்புகளின் நிரந்தர முடக்கம், மோட்டார் நியூரான் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், கடைசி கட்ட கல்லீரல் நோய், கடைசி கட்ட நுரையீரல் நோய் போன்ற நோய்கள் கவர் செய்யப்படும்.
கவர் செய்யப்படும் நோய்களின் பட்டியல் காப்பீட்டு நிறுவனத்தையும் பொறுத்துள்ளது. எனவே, ஒரே பாலிசியில் அனைத்து தீவிர நோய்களையும் கவர் செய்ய, பாலிசியின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிக்க வேண்டியது அவசியமாகும்.
கிரிடிக்கல் காப்பீட்டு பாலிசிகளை (Insurance Policy) கிரிட்டிகல் இன்சூரன்ஸ் ரைடருடனும் அல்லது தனித்தனியாகவும் மற்ற பாலிசிகளில் வாங்கலாம். கிரிடிக்கல் காப்பீட்டு பாலிசிகளில் வரி சலுகைகளும் கிடைக்கின்றன. வருமான வரிச் சட்டம் 1961 ன் கீழ், ரூ .25,000 வரையும், மூத்த குடிமக்கள் 50,000 ரூபாய் வரையும் வரி விலக்கு பெறலாம்.
ALSO READ: வயசு ஆகும்…. ஆனா, ஆகாது: இந்த இயற்கையான வழிகள follow பண்ணுங்க!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR