Kisan Credit Card: குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன்! விவசாயிகளுக்கு முன்னுரிமை!

Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என்பது சிறு மற்றும் குறு விவசாயிகளின் பண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.   

Written by - RK Spark | Last Updated : Dec 7, 2023, 09:04 AM IST
  • விவசாயிகளுக்கு கடன் வழங்கும் அரசுகள்.
  • எளிதான முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • திரும்பி செலுத்துவதும் எளிதாக உள்ளது.
Kisan Credit Card: குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன்! விவசாயிகளுக்கு முன்னுரிமை! title=

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நல திட்டங்களை கொடுத்து வருகிறது. மத்திய அரசின் திட்டமான PM Kisan Yojana திட்டமும் அதில் ஒன்று. அதேபோல, விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்க, கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்ய எளிதாகக் கடன் பெறலாம். தேசிய வங்கி விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்காக நபார்டு வங்கி இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. ஒரு KCC கணக்கு கடன் வசதியுடன் சேமிப்புக் கணக்கின் பலனையும் வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். KCC திட்டம் விவசாயிகளுக்கு எந்த நேரத்திலும் விவசாய பொருட்கள் மற்றும் சேவைகளை கடனில் வாங்க உதவுகிறது.

மேலும் படிக்க | TNEB: மழை வெள்ள பாதிப்பினால் மின் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் பற்றிய முக்கிய விஷயங்கள்:

இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டமானது, விவசாயிகளுக்கு சாகுபடி மற்றும் பிற தேவைகளுக்காக போதுமான மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  விவசாயிகள், கூட்டுக் கடன் வாங்குபவர்கள், குத்தகை விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்கள் மற்றும் பயிர் செய்பவர்கள், விவசாயிகளின் சுய உதவி குழுக்கள் (SHGs) அல்லது கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLGs) இந்த KCC க்கு விண்ணப்பிக்கலாம். கடன் வாங்குபவர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 75 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, சட்டப்பூர்வ வாரிசாக ஒரு இணை கடன் வாங்குபவர் இருப்பது கட்டாயமாகும்.

கடன்களுக்கு வங்கிகளின் சலுகைகள்

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை இந்தியாவில் உள்ள பல பிரபலமான வங்கிகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, HDFC வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் வழங்குகின்றன.  கிசான் கிரெடிட் கார்டு மீதான வட்டி விகிதம் அதன் கடன் வரம்புடன் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறுபடும். செயலாக்கக் கட்டணம், காப்பீட்டு பிரீமியங்கள் போன்ற பிற கட்டணங்கள் வங்கியின் விருப்பப்படி அமைக்கப்படும். கடன் வழங்கப்பட்ட பயிர்களுக்கு எதிர்பார்க்கப்படும் அறுவடை மற்றும் வியாபாரம் காலத்தின்படி திருப்பிச் செலுத்தும் காலம் வங்கிகளால் நிர்ணயிக்கப்படும்.  இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, முதலீட்டுக் கடனுக்கான தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்படும். வங்கிகள் தங்கள் விருப்பப்படி கடனின் வகையைப் பொறுத்து டேர்ம் லோன்களுக்கு நீண்ட திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்கலாம்.

கடன் வாங்க தேவையான ஆவணங்கள்

ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் ஒரு அடையாள சான்று தேவை. மேலும், வருவாய்த்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட நிலத்துக்கான சான்று, சாகுபடி முறை, பயிரிடப்பட்ட பயிர்கள் பரப்பளவு, கடன் வரம்புக்கான பாதுகாப்பு ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கிசான் கிரெடிட் கார்டு கார்டுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வங்கியின் இணையதளத்திலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் PM Kisan Credit Card ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை தேவையான விவரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? வரம்பை மீறினால் வருமான வரி நோட்டீஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News