கேதுவின் கருணையால் 18 மாதங்கள் காதலில் கொடி கட்டி பறக்கவிருக்கும் 3 ராசிகள்

நவக்கிரகங்களில் பாம்பு கிரகங்களான ராகுவும் கேதுவும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிப்பவர்கள். மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 18, 2022, 06:51 PM IST
கேதுவின் கருணையால் 18 மாதங்கள் காதலில் கொடி கட்டி பறக்கவிருக்கும் 3 ராசிகள் title=

கேது பெயர்ச்சி 2022: நவக்கிரகங்களில் பாம்பு கிரகங்களான ராகுவும் கேதுவும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிப்பவர்கள். மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு.

பாம்புத் தலையும் மனித உடலும் கொண்ட கிரகம் கேது. கிரகங்களில், நிழல் கிரகமான கேது 2022 ஏப்ரல் 12ம் நாளன்று துலாம் ராசிக்கு மாறினார். எப்போதும் அசுப பலன்களைத் தருகிறது என்பது கேதுவைப் பற்றிய பொதுவான நம்பிக்கை.

ஆனால் அது அவ்வாறு இல்லை, இது மூட நம்பிக்கை ஆகும். கேதுவின் சமீபத்திய பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும் 3 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்லதாக இருக்கும். மறுபுறம், இந்த பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | Zodiac Nature: மறப்போம் மன்னிப்போம் மன்னிப்பு கேட்போம் கொள்கை கொண்ட 3 ராசிகள் 
 
18 மாதங்கள் துலாம் ராசியில் இருக்கும் கேது
ராகு-கேது மெதுவாக நகரும் கிரகங்கள். அவர்கள் 18 மாதங்களில் தங்கள் இடத்தை மாற்றுகிறார்கள். இதன்படி கேது அடுத்த 18 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2023 வரை துலாம் ராசியில் இருப்பார். கேது, துலாம் ராசியில் சஞ்சரிக்கும் 18 மாதங்களும்  3 ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை தரும். புதிய வேலை கிடைக்கலாம் அல்லது இருக்கும் வேலையில் பதவி உயர்வு பெறலாம். தனியாக இருப்பவர்களுக்கு காதல் துணை கிடைக்கும். சொத்து, வாகனம் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மேலும் படிக்க | சனி கோச்சார மாற்றத்துடன் ராகு கேது பெயர்ச்சியும் இணைந்தால்
 
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் நன்மை தரும். வேலை செய்பவர்களின் வருமானம் உயர்ந்தால், வியாபாரிகளின் லாபம் அதிகரிக்கும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். இந்த நேரம் அற்புதமாக இருக்கும் என்று சொல்லலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். காதலில் வெற்றி பெறுவீர்கள். காதலுக்கான காலம் உங்களுக்கு கனிந்துவிட்டது. நினைத்த காரியம் எளிதாக நடக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். குறிப்பாக தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்துகொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வெளியூர் பயணம் செல்லலாம்.
 
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
மறுபுறம், கேதுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களைத் தரும். எனவே, இந்த ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதில் மேஷம், துலாம், தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அடங்குவர். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro: சனி-ராகு-கேது தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

Trending News