ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகப் பரிமாற்றத்தின் கண்ணோட்டத்தில் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உண்மையில், இந்த மாதம் 9 கிரகங்களின் ராசியும் மாறப் போகிறது. இந்த வரிசையில், குரு பெயர்ச்சியும் நடைபெறும் தேவகுரு வியாழன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான மீனத்தில் சஞ்சரிக்கப் போகிறார். வியாழன் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 11.23 மணிக்கு மீன ராசியில் நுழைகிறார். குரு பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியில், குரு பகவான் 12வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக பெயர்ச்சி காலத்தில் ஒருவர் வெளிநாடு செல்லலாம். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இது தவிர வியாபாரத்தில் லாபம் கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியை பொறுத்தவரை வியாழன் 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். 11வது வீடு வருமானம் தரும். இத்தகைய சூழ்நிலையில், குரு பெயர்ச்சி காலத்தில், முதலீடு லாபகரமாக இருக்கும். மேலும், பெயர்ச்சி காலத்தின் போது உங்களுக்கு பெரிய அளவில் பண ஆதாயம் இருக்கும். இது தவிர, இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகவும் நிதி நன்மைகளை பெறலாம். குடும்ப உறவுகளில் இனிமை இருக்கும். இந்த பெயர்ச்சி காலம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் தரும்
மிதுனம்
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி கர்ம நிலையில் இருக்கும். 10 வது வீடு கர்மாவாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், குரு 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது வேலையில் மகத்தான வெற்றியைக் கொடுக்கும். மருத்துவம், சட்டம் மற்றும் உணவு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய உயரங்களை எட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் மரியாதை கிடைக்கும்.
கடக ராசி
கடக ராசியின் குரு பகவான் 9வது வீட்டில் சஞ்சரிக்கிறார். 9 வது வீடு அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. இந்த ராசிகளுக்கு பெயர்ச்சி காலம் முழுவதும் மிகவும் சாதகமானதாக இருக்கும். பணியிடத்தில் செய்யும் பணி பாராட்டப்படும். சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தவிர, இந்த பெயர்ச்சி காலம் வியாபாரம் செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் தினசரி வருமானம் அதிகரிக்கும். பெரிய அலவில் சொத்து வாங்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிகளுக்கு குரு பெயர்ச்சி 8ம் வீட்டில் நடக்கப் போகிறது. இதனால் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கான பல வழிகள் இருக்கும். பயணத்தின் போது, திருமண வாழ்க்கையில் வேறொருவரின் தலையீடு உறவைக் கெடுக்கும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
குரு பெயர்ச்சி நன்மை தரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மேலும், திருமண வாழ்க்கையில் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். கூட்டுத் தொழிலில் நிதி ஆதாயம் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்கள் வெற்றி மழையில் நனைவார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR