BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - 55,000 ரூபாய் சம்பளம்... முழு விவரம்

BHEL நிறுவனத்தில் 55,000 ரூபாய் ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிப்பதற்கு 27ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 21, 2022, 03:41 PM IST
  • BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • 55,000 ரூபாய்வரை சம்பளம்
  • 27ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஆகும்
BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - 55,000 ரூபாய் சம்பளம்... முழு விவரம் title=

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் ஹைதராபாத் யூனிட்டிற்கு வாட்டர் ஃபிரண்ட் சப்போர்ட் இடங்களில் பணியமர்த்துவதற்கு, திட்டப் பொறியாளர்-Iஆக தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

காலிப் பணியிட விவரம்

திட்ட பொறியாளர்-I பதவிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. Electronics பிரிவில் 21 பணியிடங்களும், Mechanical பதவிக்கு ஒரு பணியிடமும் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் விதிகளின்படி வயதானது அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து B.E / B.Tech  முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்தத்தின் 1ஆவது, 2ஆவது, 3ஆவது ஆண்டு மற்றும் 4ஆவது ஆண்டுக்கு முறையே ரூ.40,000, ரூ.45,000, ரூ.50,000 மற்றும் ரூ.55,000 என ஒருங்கிணைக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு 85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

மேலும் படிக்க | Bank Holidays August 2022: உஷார் மக்களே!! ஆகஸ்ட் மாதம் பாதி நாட்களுக்கு வங்கிகள் இயங்காது

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் 1:5 என்ற விகிதத்தில் மேற்கூறியவற்றின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.472 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=01.%20DETAILED%20WE... என்ற தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | Ration Shops: ரேஷன் கடைகளின் செயல்முறையில் மாற்றம், பயனாளிகளுக்கு அதிகரிக்கும் நன்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News