ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அரசின் அதிரடி முடிவு, விரைவில் இரட்டிப்பு ஓய்வூதியம்

Pension Scheme: அரசாங்கம் இப்போது ஓய்வூதிய வரம்பை அதிகரிக்கப் போகிறது. அதன் பிறகு ஊழியர்களின் ஓய்வூதியம் இரட்டிப்பாகக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2023, 04:20 PM IST
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சம்பள வரம்பை ரத்து செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
  • இதனுடன், இபிஎஃப்ஓ ​​-இல் ஓய்வூதிய கணக்கீடு கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் அதாவது அதிக சம்பள வகையிலும் செய்யப்படலாம்.
  • இபிஎஃப்ஓவின் இந்த முடிவிற்குப் பிறகு, ஊழியர்கள் பெறும் ஓய்வூதியத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும்.
ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அரசின் அதிரடி முடிவு, விரைவில் இரட்டிப்பு ஓய்வூதியம் title=

ஓய்வூதிய செய்தி புதுப்பிப்பு: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. நீங்களும் அரசு ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதியம் குறித்த பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் விரைவில் அதிகரிக்கப் போகிறது என புதிய புதுப்பிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இப்போது ஓய்வூதிய வரம்பை அதிகரிக்கப் போகிறது. அதன் பிறகு ஊழியர்களின் ஓய்வூதியம் இரட்டிப்பாகக்கூடும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த முடிவிற்குப் பிறகு, ஒரு ஊழியரின் சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், ஓய்வூதியம் ரூ.15,000 என்ற தொகையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓய்வூதியம் பன்மடங்கு உயரும்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சம்பள வரம்பை ரத்து செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனுடன், இபிஎஃப்ஓ ​​-இல் ஓய்வூதிய கணக்கீடு கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் அதாவது அதிக சம்பள வகையிலும் செய்யப்படலாம். இபிஎஃப்ஓவின் இந்த முடிவிற்குப் பிறகு, ஊழியர்கள் பெறும் ஓய்வூதியத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இந்த முடிவின் மூலம், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பல மடங்கு அதிகமாக கிடைக்கும்.

ஆகஸ்ட் மாதம் விசாரணை நடைபெற்றது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி, யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் இபிஎஃப்ஓ தாக்கல் செய்த ஒரு தொகுதி மனுக்களின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஊழியர்களின் ஓய்வூதியத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இப்போது அதிகபட்ச ஓய்வூதியம் எவ்வளவு?

பல்வேறு வேலைகளில் பணியமர்த்தப்பட்டவர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இபிஎஸ் (EPS) -இன் உறுப்பினர்களாகவும் கருதப்படுகிறார்கள். அனைத்து ஊழியர்களும் தங்கள் சம்பளத்தில் 12% இபிஎஃப் -க்கு பங்களிக்கின்றனர். இதனுடன், ஊழியரின் நிறுவனமும் அதே அளவு தொகையைப் பங்களிக்கின்றது. அதில் 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்கிறது. இந்த நேரத்தில் அதிகபட்ச ஓய்வூதிய சம்பளத்தைப் பற்றி பேசினால், அது ரூ 15,000 ஆக உள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை சம்பளத்தில் அதிரடி ஏற்றம், ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்

58 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கும்.

அனைத்து பணியாளர்களும் 58 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறார்கள். இதற்கு, பணியாளர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனுடன், இபிஎஃப் -க்கு பங்களிக்கும் ஊழியர்களும் இபிஎஸ் -க்கு தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓய்வூதிய தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

இதனுடன், சமீபகாலமாக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து வந்துள்ள ஏகப்பட்ட புகார்களில் ஓய்வூதியத்திற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஓய்வூதியத் தேதியை நிர்ணயிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News