பள்ளி மாணவர்களுக்கான சொந்த சேனலை துவங்குகிறது ISRO!

பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலை தொடங்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!! 

Last Updated : Aug 14, 2018, 04:30 PM IST
பள்ளி மாணவர்களுக்கான சொந்த சேனலை துவங்குகிறது ISRO! title=

பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலை தொடங்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!! 

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (இஸ்ரோ) மக்களிடையே விஞ்ஞான மனநிலையை வளர்க்கவும், பள்ளி மாணவர்கள் பயன்பெறவும் பயிற்சி முகாம் மற்றும் சொந்தமாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ நிறுவனம், 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அவர்களின் திறமையை மேம்பாட்டுத்த திட்டங்களைத் தக்கவைத்துக் கொள்ள பல திட்டங்களை அறிமுகம் செய்யயுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு மற்றும் பயிற்சி முகாம்களை 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மாணவர்கள் ஆய்வகத்தை பார்வையிட அனுமதிக்க படுவதாகவும் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் பரந்து விரிந்த இஸ்ரோ டி.வி-யை அறிமுகப்படுத்தும் திட்டத்தில், விண்வெளி ஏஜென்சி தலைவர் கூறுகையில், "இதுவரை எவ்வித அறிவியல் டி.வி. சேனலும் இல்லை, இந்த சேனல் மக்களிடையே விஞ்ஞான மனநிலையை ஏற்படுத்தும்."
இதுதவிர, விண்வெளி தொழிற்நுட்ப துறையில் தனி திறமையை வளர்த்துக்கொள்ள இது  ஒரு துண்டுகளாக அமையும் என்று கூறியுள்ளார். 

மேலும், "நாங்கள் ஒரு காப்பீட்டு மையத்தை வைத்திருக்க விரும்புகிறோம், எங்கள் நோக்கம் சிறந்த மூளை மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும், இந்த துவக்கங்கள் ISRO உடன் இணைந்து கொள்ளாமல் பங்களிக்க முடியும்" என்று திரு சிவன் தெரிவித்தார்.

 

Trending News