பணத்தை பெருக்குவது ஒரு கலை. இதற்கு, புத்திசாலித்தனமான முதலீட்டுத் திட்டமிடல் மிகவும் அவசியம். இப்போது புத்திசாலித்தனமான முதலீட்டுத் திட்டமிடல் என்றால் என்ன என்பதில் மக்களுக்கு சிறிது குழப்பம் உள்ளது. நாம் செய்யும் முதலீடு எப்போதும் பாதுகாப்பாகவும் நீண்ட காலத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். இதனுடன், எந்த முதலீட்டுத் திட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதும் மிக அவசியம்.
நாம் எவ்வளவு இளம் வயதில் முதலீடு செய்ய தொடங்குகிறோமோ, அவ்வளவு அதிக லாபம் கிடைக்கும்.
முதலீட்டை பொருத்தவரை 15X15X15 என்னும் முதலீட்டு ஃபார்முலாவைப் பின்பற்றினால் நீங்களும் கோடீஸ்வரராகலாம். இந்த சூத்திரத்திற்குப் பின்னால் உள்ள அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம். இந்த ஃபார்முலாவின் கீழ் முதலீடு நீண்ட காலத்திற்கான முதலீடாக இருக்க வேண்டும். இது பவர் ஆப் காம்பவுண்டிங் என்றும் கூறலாம். அதாவது கூட்டு வட்டியின் சக்தி,
கூட்டு வட்டியின் சக்தி என்றால் என்ன
முதல் ஆண்டில் அசல் முதலீட்டின் மீதான வட்டி கிடைக்கும். அடுத்த ஆண்டில், அசல் மற்றும் வட்டி இரண்டு தொகைகளுக்கும் வட்டி கிடைக்கும். இதே போல் கூட்டு வட்டி மூலம் ஒவ்வொரு ஆண்டும் வட்டிக்கு வட்டி கிடைப்பதால் பணம் எளிதில் பெருகிக் கொண்டே போகும்.
முதலீடு + வட்டி + வட்டி + வட்டி = கூட்டு காம்பவுண்டிங்
மேலும் படிக்க | ஜிஎஸ்டியில் புதிய மாற்றம்! சாமானியர்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது?
15x15x15 சூத்திரம்
உதாரணமாக, நீங்கள் 15 ஆண்டுகளுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு 15 சதவீத வட்டி கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் மொத்தம் ரூ.27 லட்சம் முதலீடு செய்வீர்கள். இது தவிர கூட்டு வட்டித் தொகையாக ரூ.73 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.1 கோடி வருமானம் கிடைக்கும்.
10 ஆண்டுகளுக்கு முதலீடு
மாதாந்திர SIP: ரூ 10 ஆயிரம்
மதிப்பிடப்பட்ட வருவாய்: ஆண்டுக்கு 12 சதவீதம்
முதலீட்டு காலம்: 10 ஆண்டுகள்
உங்கள் மொத்த முதலீடு: ரூ 12 லட்சம்
SIP-ன் மொத்த மதிப்பு: ரூ 23 லட்சம்
பலன்: ரூ.11 லட்சம்
15 வருட முதலீடு
மாதாந்திர எஸ்ஐபி: ரூ 10 ஆயிரம்
மதிப்பிடப்பட்ட வருவாய்: ஆண்டுக்கு 12 சதவீதம்
முதலீட்டு காலம்: 15 ஆண்டுகள்
உங்கள் மொத்த முதலீடு: ரூ 18 லட்சம்
SIP-ன் மொத்த மதிப்பு: ரூ 49.96 லட்சம்
பலன்: ரூ.31.96 லட்சம்
20 ஆண்டுகளுக்கு முதலீடு
மாதாந்திர எஸ்ஐபி: ரூ 10 ஆயிரம்
மதிப்பிடப்பட்ட வருவாய்: ஆண்டுக்கு 12 சதவீதம்
முதலீட்டு காலம்: 20 ஆண்டுகள்
உங்கள் மொத்த முதலீடு: ரூ 24 லட்சம்
SIP இன் மொத்த மதிப்பு: 98.93 லட்சம்
பலன்: ரூ.74.93 லட்சம்
இதன் மூலம் ஆண்டுகள் கூடக் கூட உங்களுக்கு கிடைக்கும் பலன் பன் மடங்கு பெருகிச் செல்வதைக் காணலாம்.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR