FD Interest Rates: 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல், நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டியை வங்கிகள் அதிகரிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து ஐந்து முறை ரெப்போ விகிதத்தை உயர்த்தியதால் FD-இன் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன.
எனினும், இம்முறை ஏப்ரல் மாதம் நடைபெற்ற பணக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது, கடந்த 11 மாதங்களில் அதிகரித்து வரும் வட்டி விகிதத்தில் இருந்து கடன் வாங்கியவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் ரெப்போ விகிதத்தில் 250 அடிப்படை புள்ளிகள் (BPS) அதிகரித்துள்ளது. கடைசியாக பிப்ரவரி 2023இல் 25 பிபிஎஸ் உயர்த்தப்பட்டது. இது ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகக் கொண்டு சென்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் நிலையான வைப்புகளின் மீதான வருமானத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் கிடைக்கும் எஃப்டி விகிதங்கள் குறித்து இங்கே காணலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: இன்று மாலை வரும் நல்ல செய்தி
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி FDக்கு 3.00% மற்றும் 7.10% ஆண்டு வட்டி செலுத்துகிறது. மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதல் 0.50 சதவீத வட்டியையும் வழங்குகிறது. வங்கி அவர்களுக்கு 3.50% மற்றும் 7.60% வட்டி அளிக்கிறது. இத்திட்டத்தின் காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை.
HDFC வங்கி
HDFC வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு வட்டி வழங்குகிறது. வங்கி ஆண்டு வட்டியாக 3% முதல் 7.1% வரை செலுத்துகிறது. மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதல் 0.50 சதவீத வட்டியையும் வழங்குகிறது. வங்கி அவர்களுக்கு 3.50% மற்றும் 7.60% வட்டி அளிக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி ஆண்டு வட்டியை 3.50 சதவீதம் முதல் 7.20 சதவீதம் வரை வழங்குகிறது. வங்கி பொது மக்களுக்கு ஆண்டுக்கு 3.50 சதவீதம் முதல் 7.95 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வட்டி வழங்குகிறது. இந்த கட்டணங்கள் கடந்த ஏப். 21 முதல் அமலுக்கு வந்தது.
எஸ்பிஐ வங்கி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களுக்கு FD-களை வழங்குகிறது. பொது மக்களுக்கான SBI FD வட்டி விகிதங்கள் 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் செலுத்தப்படுகிறது மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.60% வரையிலான வட்டி விகிதங்கள் பிப். 15 முதல் அமலுக்கு வந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ