முந்துங்கள்: IndiGo விமானங்களின Ticket விலை அதிரடி குறைப்பு!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2018, 07:50 PM IST
முந்துங்கள்: IndiGo விமானங்களின Ticket விலை அதிரடி குறைப்பு! title=

IndiGo விமான சேவை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி டிக்கெட் விலை குறைப்பினை அறிவித்துள்ளது!

இந்த சலுகை அறிவிப்பின் படி ஒரு வழி பயணத்திற்கு 10% சலுகையும், இருவழி பயணத்திற்கு 15% சலுகையும் அறிவித்துள்ளது IndiGo நிறுவனம்.

இந்த சலுகையானது நாளை (ஆகஸ்ட் 30-ஆம்) வரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களு மட்டும் செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளது இந்நிறுவனம். இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் பெற SEP15P எனும் Promo Code-னை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த சலுகையிலை வேறு எந்த திட்டத்துடனோ அல்லது விளம்பரப்படுத்துதலுடன் இணைக்க முடியாது எனவும் IndiGo நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சலுகையானது non-stop விமான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேலையில் செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8 வரையிலான காலத்திற்குள் பயணிக்கும் விமானத்திற்கு டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை விலை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News