உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 85வது இடத்தை பிடித்துள்ளது, இந்தியர்களிடம் இருக்கும் பாஸ்போர்ட் மிகவும் வலிமையானது என்பதை இப்போது நாம் உணர முடியும். சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் வழங்கிய தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில், லண்டனைச் சேர்ந்த உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் 2023 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டை வெளியிட்டுள்ளது. 2023 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தரவரிசையின்படி, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தரவரிசையின்படி இந்தியா 85வது இடத்தை பிடித்துள்ளது, இதன் மூலமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 59 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் இந்தியா 87வது இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது இரண்டு படிகள் முன்னேறி 85வது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் ஜப்பானிலிருந்து 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
உலகின் சக்திவாய்ந்த முதல் 10 நாடுகளின் பாஸ்போர்ட்கள்:
1. ஜப்பான் — விசா - ஃப்ரீ ஸ்கோர் : 193
2. சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 192
3. ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 190
4. பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பர்க் — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 189
5. ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 188
6. பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் யுனைடெட் கிங்டம் — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 187
7. பெல்ஜியம், செக் குடியரசு, நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 186
8. ஆஸ்திரேலியா, கனடா, கிரீஸ் மற்றும் மால்டா — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 185
9. ஹங்கேரி மற்றும் போலந்து — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 184
10. லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா — விசா - ஃப்ரீ ஸ்கோர்: 183
நீங்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவராக இருந்தால் விசா இல்லாமல் உலகின் 59 இடங்களுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வலிமையான பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 85 வது இடத்தைப் பிடித்துள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியா 82 வது இடத்தைப் பிடித்தது. மேலும் 2021ம் ஆண்டில் இந்தியா 84 வது இடத்தையும், 2022ம் ஆண்டில் 85வது இடத்தையும், 2023ல் 83வது இடம் பிடித்துள்ளது.
மேலும் படிக்க | Jackpot! இந்த அரிய 1 ரூபாய் நோட்டு உங்களை கோடீஸ்வரனாகும்!
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்யலாம்?
1) அண்டார்டிகா
2) பூடான்
3) டொமினிகா
4) எல் சல்வடோர்
5) பிஜி
6) கிரெனேட்
7) ஹைடி
8) ஜமைக்கா
9) ஜெஜு மாகாணம் (தென் கொரியா)
10) மொரீஷியஸ்
11) மைக்ரோனேசியா
12) நேபாளம்
13) செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
14) செயின்ட் வின்சென்ட் & நெவிஸ்
15) செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ்
16) செனகல்
17) ஸ்வால்பார்ட்
18) சுரினேம்
19) டிரினிடாட் மற்றும் டொபாகோ
20) வானுவாடு
21) ஹாங்காங்
22) கிஷ் தீவு
23) மக்காவ்
24) பாலஸ்தீனம்
25) பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
26) மாண்ட்செராட்
27) குக் தீவுகள்
28) பிட்காயின் தீவுகள்
29) வடக்கு சைப்ரஸ்
30) பெலோவேல்ஸ்கயா புஸ்ச்சா தேசிய பூங்கா
31) செர்பியா
32) தெற்கு ஒசேஷியா
33) டிரான்ஸ்னிஸ்ட்ரியா
34) துனிசியா
35) ரியூனியன்
36) சோமாலிலாண்ட்
மேலும் படிக்க | பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால் விரைவில் ‘அம்பானி’ ஆகலாம்!
விசா பெறும் நாடுகளின் பட்டியல்:
1) பொலிவியா
2) கம்போடியா
3) கேப் வெர்டே
4) கொமொரோஸ்
5) ஜிபூட்டி
6) எத்தியோப்பியா
7) கினியா-பிசாவ்
8) கயானா
9) இந்தோனேசியா
10) ஜோர்டான்
11) கென்யா
12) லாவோஸ்
13) மடகாஸ்கர்
14) மாலத்தீவுகள்
15) மொரிட்டானியா
16) நவ்ரு
17) பலாவ்
18) செயின்ட் லூசியா
19) சமோவா
20) சீஷெல்ஸ்
21) சோமாலியா
22) ஸ்ரீ லங்கா
23) தான்சானியா
24) தாய்லாந்து
25) டிமோர் லெஸ்டே
26) டோகோ
27) துவாலு
28) உகாண்டா
29) நியு
30) ஜிம்பாப்வே
மேலும் படிக்க | மயில் உள்ள ‘10’ ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா... நீங்களும் அம்பானி ஆகலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ