Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியது IRCTC, இனி நேரம் மிச்சமாகும்

Indian Railways: கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துள்ளதால் பயணிகளிடம் சேருமிடத்தின் முகவரியை ஐஆர்சிடிசி இனி கேட்காது. இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2022, 03:39 PM IST
  • ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கான முக்கிய செய்தி.
  • டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.
  • இந்திய ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டது.
Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியது IRCTC, இனி நேரம் மிச்சமாகும் title=

இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு: ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கான முக்கிய செய்தி!! கோவிட்-19 பாதிப்பு குறைந்ததை அடுத்து, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் இந்திய ரயில்வே சிறிய மாற்றங்களைச் செய்துள்ளது. 

இந்த மாற்றங்களுக்குப் பிறகு, குறைந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேருமிட முகவரியைக் (டெஸ்டினேஷன்) கொடுக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது

இந்திய ரயில்வே சார்பில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் சேருமிட முகவரியை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துள்ளதால் பயணிகளிடம் சேருமிடத்தின் முகவரியை ஐஆர்சிடிசி இனி கேட்காது. இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Indian Railways: அடேங்கப்பா; இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் 

விதிகள் ஒவ்வொன்றாக திரும்பப் பெறப்படுகின்றன

கொரோனா தொற்றுநோய்களின் போது கோவிட் பாசிட்டிவ் பயணிகளைக் கண்டறிய இலக்க முகவரி உதவியாக இருந்தது. கொரோனா காலத்தில் தொற்றை சமாளிக்கும் வகையில், ரயில்வே பல விதிகளை அமல்படுத்தியது. 

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து, இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விதிகள் ஒவ்வொன்றாக திரும்பப் பெறப்படுகின்றன.

மென்பொருள் மாற்றங்கள் தேவை

ரயில்வே அமைச்சகத்தின் இந்த விதியை திரும்பப் பெறுவதால் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரமும் குறையும். இலக்கை (டெஸ்டினேஷனை) குறிப்பிட வேண்டாம் என்ற ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிஆர்ஐஎஸ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவையும் உத்தரவின்படி மென்பொருளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

முன்னதாக, ஏசி பெட்டிகளில் தலையணை போர்வை வழங்கும் வசதியை ரயில்வே மீண்டும் தொடங்கிது. கொரோனா தொற்றுநோய்களின் போது தொற்று பரவாமல் இருக்க இந்த வசதி நிறுத்தப்பட்டது. இப்போது பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கு இரவில் தூங்குவதற்கு தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ ரீஃபண்ட் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News