சமையல் எரிவாயு சிலிண்டரை இனி வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செயலாம்!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை தொடங்கியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Feb 25, 2020, 01:16 PM IST
சமையல் எரிவாயு சிலிண்டரை இனி வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செயலாம்!!   title=

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை தொடங்கியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது!!

வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன், தமிழகத்தில் 2.38 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 1.36 கோடி பேருக்கு வினியோகம் செய்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறையை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். சரியான கட்டணம், சரியான எடை, முறையான சீல் மற்றும் முறையான சேவை உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம். இதேபோல், இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். 

 

Trending News