ஒரு சாதாரண முட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமான 19 வயதான இஷான் கோயல்

இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த சாதாரண முட்டை படத்தின் சொந்தக்காரர் 19 வயதான இஷான் கோயல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2019, 04:06 PM IST
ஒரு சாதாரண முட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமான 19 வயதான இஷான் கோயல் title=

அமெரிக்க தொலைக்காட்சியின் ரியாலிட்டி நட்சத்திரமான கைலி ஜென்னர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படத்தின் லைக் சாதனையை இந்திய நபர் வெளியிட்ட ஒரு சாதாரண முட்டையின் புகைப்படம் முறியடித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் 21 வயதான நடிகை கைலி ஜென்னர் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படம் மிகவும் வைரலானது. இது 18 மில்லியனுக்கு அதிகமாக லைக் பெற்று, அதிக லைக் பெற்ற இன்ஸ்டாகிராம் புகைப்படம் என்ற சாதனையை படைத்தது. இந்த சாதனையை இந்தியாவை சேர்ந்த 19 வயதான இஷான் கோயல் முறியடித்துள்ளார். அது எப்படி சாத்தியமானது என்று பார்ப்போம்.

சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வாருங்கள்... நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நடிகை கைலி ஜென்னரின் சாதனையை முறியடிபோம்" எனக்கூறி இஷான் கோயல், ஒரு முட்டையின் புகைப்படத்தை பகிர்ந்தார். இந்த சாதாரண முட்டையின் புகைப்படம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வைரலானதோடு, அதிக லைக்கும் பெற்றுள்ளது. 

இந்த சாதாரண முட்டையின் புகைப்படம் 49 மில்லியனுக்கு அதிகமான லைக்கள் பெற்று, நடிகை கைலி ஜென்னரின் லைக் சாதனையை முறியடித்துள்ளது. இந்த சாதனையை அடுத்து, வீடியோ ஒன்றை வெளியிட்ட 19 வயதான இஷான் கோயல், "எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை முட்டை தந்த கோழிக்கு எல்லாவற்றையும் கொடுக்க விரும்புகிறேன். ஒரு விசியம் வைரல் ஆக வேண்டும் என்றால், அதற்கு குறிப்பிட்ட காரணம் தேவையில்லை. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் வைரலானால், அது மிகப்பெரிய விசியம் தான்" என்று கூறினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News