புது தில்லி: 2021-22 நிதியாண்டு (FY22) நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. புதிய நிதியாண்டு (FY23) ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்கும். இந்த சூழ்நிலையில், மார்ச் 31, 2022க்கு முன் பல வரி மற்றும் முதலீடு தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 ஆகும். மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி வரலாம். அல்லது உங்கள் பான் கார்டு முற்றிலும் செயலிழந்தும் போகலாம். பான்-ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு பலமுறை நீட்டித்துள்ளது. முன்னதாக பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2021 ஆக இருந்தது.
ஐடிஆர் தாக்கல்
AY2021-22 க்கான தாமதமான ஐடிஆர் (பிலேடட் ஐடிஆர் தாக்கல்) தாக்கலுக்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 ஆகும். ஆகையால், வருமானம் ஈட்டும் நபர்கள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தனது ஐடிஆரைத் தாக்கல் செய்யத் தவறி இருந்தால், அவர்கள் பிலேடட் ஐடிஆர்-ஐ 31 மார்ச் 2022க்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | LPG சிலிண்டர்களின் விலை குறைந்தது: புதிய விலை விவரம் இதோ
வங்கி கணக்குகளின் KYC
முன்னதாக வங்கிக் கணக்குகளின் KYC-ஐ புதுப்பிப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேதி நீட்டிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) KYCஐப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை 31 மார்ச் 2022 வரை வைத்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கு அதாவது சேமிப்புக் கணக்குக்கான KYC ஐ செய்து முடிக்க வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வரியைச் சேமிக்க முதலீடு செய்யுங்கள்
அதிகபட்ச வரியைச் சேமிக்கும் அனைத்து முறைகளையும் இதுவரை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், இந்தப் பணியை விரைவில் செய்து முடிப்பது நல்லது. வரிச் சேமிப்பிற்காக நீங்கள் முழுமையாக முதலீடு செய்யவில்லை என்றால், மார்ச் 31ஆம் தேதிக்குள் அதைச் செய்து முடிக்கவும். 2021-2022 நிதியாண்டிற்கான வருமான வரி விலக்கு பெற, நீங்கள் மார்ச் 31, 2022க்குள் முதலீடு செய்ய வேண்டும்.
அட்வான்ஸ் டேக்ஸ்
வருமான வரி-யின் பிரிவு 208ன் கீழ், 10,000 ரூபாய்க்கு மேல் வரி செலுத்துவோர் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்தலாம். மார்ச் 15, 2022 அட்வான்ஸ் வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இருந்தது. இது மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Zomato Instant: இனி 10 நிமிடங்களில் உணவை டெலிவரி; அசத்தும் Zomato
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR