PPF - SSY விதிகளில் மாற்றம்: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), மகிளா சம்மான் யோஜனா மற்றும் தபால் அலுவலகங்களில் முதலீட்டாளர்களுக்கான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. இப்போது இந்தத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பான் (PAN Card) மற்றும் ஆதார் (Aadhaar) அட்டை வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. நீங்களும் இந்த அரசாங்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பான் கார்டு அல்லது ஆதார் அட்டை இணைக்கவில்லை என்றால், நீங்கள் அதை விரைவில் முடிக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.
திட்டங்களில் வெளிப்படைத் தன்மை
நீங்கள் இதைச் செய்யாவிட்டால், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டீர்கள். இந்தத் திட்டங்களில் முதலீட்டை மிகவும் வெளிப்படையானதாகவும் எளிதாகவும் மாற்றும் நோக்கத்தில் இந்த மாற்றம் அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதார் எண் இல்லாமல் கூட இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்ற நிலை இருந்தது.
மேலும் படிக்க | அதிர்ச்சி! இனி ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்!
முதலீடு செய்ய பான் கார்டை காட்டுவது அவசியம்
முதலீட்டாளர்கள் எந்த வகையான முதலீடும் செய்வதற்கு முன் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வரம்பைத் தாண்டி முதலீடு செய்ய, பான் கார்டைக் காட்ட வேண்டும். அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்களில் முதலீட்டை மிகவும் வெளிப்படையானதாகவும் எளிதாகவும் செய்ய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால் கணக்கைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் முதலீடு செய்தால், நீங்கள் பான் கார்டையும் சமர்ப்பிக்க வேண்டும். சிறு சேமிப்புத் திட்டக் கணக்கைத் திறக்க உங்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் தேவைப்படும்.
தேவையான ஆவணங்கள்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு சீட்டு
- பான் எண், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை 30 செப்டம்பர் 2023க்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்கு அக்டோபர் 1, 2023 முதல் தடை செய்யப்படும்.
மேலும் படிக்க | டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதை செய்யுங்கள்... ஏன் ரொம்ப அவசியம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ