500 Rupees Note Update: உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இதோ 500 ரூபாய் நோட்டுக்கான புதிய வழிகாட்டுதல், மற்றும் அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். இன்றைய இந்த கட்டுரையில், இவை அனைத்தையும் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை தெரிந்துக்கொள்வோம்.
நாடு முழுவதும் கரன்சி நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் கொண்டு வருவதற்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) முழு அதிகாரம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் வங்கி நோட்டுகள் மற்றும் நாணயங்களின் முழு புழக்கமும் விநியோகமும் இந்திய ரிசர்வ் வங்கியால் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல்வேறு வகையான பணமதிப்பிழப்பு உத்தரவுகளை வெளியிட்டு புதிய நோட்டுகளை வெளியிடுகிறது. இந்த உத்தரவுகள் நாட்டின் பொருளாதாரத்தின் நலன்கள் மற்றும் பொருளாதார நிலையை மனதில் கொண்டு எடுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 500 ரூபாய் நோட்டுகளுக்கான (500 Rupees Note) புதிய வழிகாட்டுதல் 2024 ஐ வெளியிட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் அனைத்து வாசகர்களின் தகவலுக்காக, 2024 ஆம் ஆண்டுக்கான 500 ரூபாய் நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, பழைய கிழிந்த சிதைந்த 500 ரூபாய் நோட்டுகளை அனைத்து வாடிக்கையாளர்கள், தங்கள் நகரின் ரிசர்வ் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வந்தே பாரத்தின் வேகம் குறைகிறதா... உண்மை நிலை என்ன..!!
பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றலாம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து, அதற்கு பதிலாக புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரூ.2000 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன்படி தற்போது இந்தியாவில் ரூ.500 நோட்டுகள் மட்டுமே அதிகபட்ச ரூபாய் நோட்டாக புழகத்தில் உள்ளது. அதன்படி இந்த நோட்டுகள் கிழிந்தோ அல்லது சிதைந்து இருந்தாலோ ரிசர்வ் வங்கியைத் தொடர்புகொண்டு தங்கள் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். மேலும் நோட்டின் முக மதிப்பை திரும்பப் பெறவும் முடியும்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, கிழிந்த பழைய நோட்டுகளை மக்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, நோட்டுகளை மாற்ற விரும்பும் அனைத்து நுகர்வோரும் பின்வரும் முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.
* மக்கள் மாற்ற விரும்பும் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் தெளிவாக இருக்க வேண்டும்.
* நோட்டில் எண் தெளிவாகக் இடம்பெற்றிருக்க வேண்டும்.
* நோட்டில் உள்ள உறுதிமொழி விதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
* கூடுதலாக, நோட்டில் அசோக தூண் அல்லது மகாத்மா காந்தி சிலை இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | கேதார்நாத் டூர் செல்ல பிளானா... இந்த செய்தி உங்களுக்கு தான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ