இந்த 5 ராசிக்காரர்களின் இன்னல்களை குரு பகவான் தீர்த்து வைப்பார்

இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். குருவின் அருளால் இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 09:54 AM IST
  • தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்
  • இந்த நேரம் நன்மை பயக்கும்
  • நிதி நிலை சிறப்பாக இருக்கும்
இந்த 5 ராசிக்காரர்களின் இன்னல்களை குரு பகவான் தீர்த்து வைப்பார் title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக குரு கருதப்படும். வியாழன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கும்ப ராசியில் உள்ளது மற்றும் 12 ஏப்ரல் 2022 அன்று தனது சொந்த ராசியான மீனத்தில் நுழைகிறது. இதற்கிடையில், 23 பிப்ரவரி 2022 அன்று, குரு வியாழன் அஸ்தமித்து, மார்ச் 27 அன்று உதயமாகும். இந்த நேரத்தில், வியாழன் அமைவது அனைத்து ராசி அறிகுறிகளிலும் பெரிய சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் 5 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். குருவின் அருளால் இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சாதகமாக இருக்கும். குருவின் அருளால் திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் வாழ்க்கையை ஒரு புதிய திசையில் கொண்டு செல்லும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் வெற்றியைத் தரும். பணம் சாதகமாக இருக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். ஆன்மிகம் மற்றும் சமயப் பணிகளில் ஈடுபடலாம். இது மன நிம்மதியை தரும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்மை பயக்கும். இக்காலத்தில் பணம், கௌரவம் அனைத்தையும் பெறுவார்கள். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள்.

துலாம்: குருவின் அருளால் பணம் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை முடங்கிக் கிடந்த பணிகள் முழுமை அடையும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படலாம்.

விருச்சிகம்: இந்த நேரத்தில் பழைய பிரச்சனைகள் விலகும். அந்த பிரச்சனைகள் நிதியா அல்லது தொழில்-வியாபாரம் தொடர்பானவையா. தற்போது நீங்கள் உங்கள் வேலைகளில் வெற்றி பெறத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News