புதன் ராசி பரிவர்த்தனை ஏப்ரல் 2022: பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியாக புதன் கிரகம் கருதப்படுகிறது. ஏப்ரல் 08 வெள்ளிக்கிழமையன்று புதனின் ராசி மாற்றம் நிகழும்.
இந்நாளில், புதன் மீன ராசியில் இருந்து, பகல் 12:05 மணிக்கு மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். ஏப்ரல் 24, ஞாயிறு வரை புதன் மேஷ ராசியில் இருப்பார். மேஷ ராசியில் நுழையும் புதனால் 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படும்.
இந்த காலகட்டத்தில், சிலருக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த பணிகள் நிறைவடையும். புதனின் ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் மேஷ ராசியில் நுழைவதால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். ஏப்ரல் 08 முதல் 24 வரை சில பெரிய பொறுப்புகளை நீங்கள் பெறக்கூடும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் புதனின் மாற்றத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களது நேர்த்தியான பாணியால் பலர் ஈர்க்கப்படுவரகள், உங்களால் நல்ல தாக்கம் உருவாகும். இந்த நேரத்தில் புதிய யோசனைகளால் வெற்றி பெறலாம். உங்கள் நிதிநிலை வலுவாக இருக்கும்.
மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்கு பின் ராசி மாறும் சனி பகவான்; இந்த ராசிகளுக்கு கவனம் தேவை
தனுசு:
மேஷ ராசியில் புதன் பிரவேசிப்பதால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் கொஞ்சம் நிதானம் தேவை. கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.
மகரம்:
மேஷ ராசியில் புதன் மாறுவதால், மகர ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். ஏப்ரல் 8-24 வரையிலான நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சொத்தில் முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பண ஆதாயம் ஏற்படும். உங்கள் வருமானம் கூடும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தின் போது பண வரவு அதிகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறக்கூடும். இந்த ஒப்பந்தம் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். கடனில் இருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க | செவ்வாயின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR