நீங்கள் பழைய நாணயம் சேமிப்பவரா.. அப்படியானால், லட்சாதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது..!!!

நீங்கள் பழைய நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர் என்றால், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டலாம். நீங்கள் லட்சாதிபதி ஆகலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 10:32 AM IST
  • நீங்கள் பழைய நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர் என்றால், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டலாம். நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.
  • பழங்கால பொருட்களை விற்கும் வாய்ப்பை இப்போது பல இ-காமர்ஸ் வலைத்தளங்களில் காணலாம்.
  • வைஷ்ணவதேவி கோவில் பொறிக்கப்பட்ட ஒரு நாணயத்தை பெற மக்கள் லட்சம் ரூபாய் செலவிட கூட தயாராக உள்ளனர்.
நீங்கள் பழைய நாணயம் சேமிப்பவரா.. அப்படியானால், லட்சாதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது..!!! title=

நீங்கள் பழைய நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர் என்றால், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டலாம். நீங்கள் லட்சாதிபதி ஆகலாம். 

புதிய யுகத்தில் இருக்கும் இந்த உலகில் பழைய பொருட்களை விற்று பணக்காரர்களாக மாறிய செய்திகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ‘பழங்கால’  பொருள்கள் சர்வதேச சந்தையில் அதிகம் தேடும் பொருளாக உள்ளது. அதை வாங்க பலத்த போட்டியும் உள்ளது. அதை மிக அதிக விலைக்கு விற்கலாம்.

பழங்கால கேமிராக்கள், பழங்கால கார்கள், வாகனங்கள் ஆகியவற்றின் விலை மிகவும் அதிகம். அவை பல சமயங்களில் கண்காட்சிக்காக கூட வைக்கப்படுகின்றன.

பழங்கால பொருட்களை விற்கும் வாய்ப்பை இப்போது பல இ-காமர்ஸ் வலைத்தளங்களில் காணலாம். 

மாதா வைஷ்ணோ தேவி” சன்னதியின் படத்துடன் இருக்கும், ரூ .5 மற்றும் ரூ .10 மதிப்புள்ள நாணயங்கள் இருந்தால், அவற்றை ஏலம் விடலாம் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் படிக்க | சின்ன சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை.... ஆனால் மனிதனால் பறக்க முடிவதில்லையே ஏன்...!!!

2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இந்த நாணயங்களுக்கு இன்னும் அதிக டிமாண்ட் உள்ளது. மாதா வைஷ்ணோ தேவி இந்து மத நம்பிக்கையில் பெரிதும் போற்றப்படும் தேவி என்பதால், வைஷ்ணவதேவி கோவில் பொறிக்கப்பட்ட ஒரு நாணயத்தை  பெற மக்கள் லட்சம் ரூபாய் செலவிட கூட தயாராக உள்ளனர்.

இதுபோன்ற மிகவும் பிரபலமான மற்றொரு தொடர், குறிப்பாக ‘786’. ‘786’ என்ற எண்ணுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை இஸ்லாமிய இனத்தவர் புனிதமாகக் கருதப்படுகின்றன. இதை வாங்குவதற்கும் பலர் விருப்பம் காட்டுகின்றனர்.

எனவே, இதுபோன்ற ஏதேனும் ஒரு நாணயத்தை, அல்லது ரூபாய் நோட்டுகளை நீங்கள் வைத்திருந்தால், ஆன்லைனில் ஏலம் விடுவதன் மூலம் லட்சாதிபதி ஆகலாம். 

மேலும் படிக்க | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News