ஹைதராபாத் சட்ட மாணவி 4042 அரிசியில் பகவத் கீதை எழுதி சாதனை..!!!

அரிசியில் எழுதும் நுண்கலையில் தேர்ச்சி பெற்ற இந்த ஹைதராபாத் சட்ட மாணவியான ராமகிரி ஸ்வரிகாவிற்கு, அரிசியில் பகவத் கீதையை எழுதி முடிக்க, 15 மணிநேரம் ஆகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 01:03 PM IST
  • அரிசியில் எழுதும் நுண்கலையில் தேர்ச்சி பெற்ற இந்த ஹைதராபாத் சட்ட மாணவியான ராமகிரி ஸ்வரிகாவிற்கு, அரிசியில் பகவத் கீதையை எழுதி முடிக்க, 15 மணிநேரம் ஆகியுள்ளது.
  • நுண்கலையில் சுமார் 2,000 கலைப்படைப்புகளை படைத்துள்ளார். கலைஞர் ராமகிரி ஸ்வாரிகா கூறுகிறார்.
ஹைதராபாத் சட்ட மாணவி 4042 அரிசியில் பகவத் கீதை எழுதி சாதனை..!!! title=

நாட்டின் முதல் பெண் நுண்கலை நிபுணர், அதாவது மைக்ரோ ஆர்ட்டிஸ்ட் ஆன ஹைதராபாத் சட்ட மாணவி ராமகிரி ஸ்வரிகா, தனது சமீபத்திய சாதனையாக, 4,042 தானிய அரிசி மீது பகவத் கீதை எழுதியுள்ளார். அவரது 2,000 கலைப்படைப்புகளின் தொகுப்பில், இது அற்புதமானது என கருதுவதாக கலைஞர் ராமகிரி ஸ்வரிகா கூறுகிறார்.

அரிசியில் எழுதும் நுண்கலையில் தேர்ச்சி பெற்ற இந்த ஹைதராபாத் (Hyderabad) சட்ட மாணவியான ராமகிரி ஸ்வரிகாவிற்கு, அரிசியில் பகவத் கீதையை எழுதி முடிக்க, 150 மணிநேரம் ஆகியுள்ளது. 

அவர், காகித சிற்பங்களையும் செய்கிறார், மேலும் எள்ளை கொண்டும் வரைந்துள்ளார்.

கடந்த காலங்களில், ஸ்வாரிகா அரசியலமைப்பின் முன்னுரையை  மயிரிழைகளை வைத்து எழுதினார், அதற்காக தெலுங்கானா (Telangana) ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரை பாராட்டினார்.

"தேசிய அளவில் எனது பணிக்காக அங்கீகாரம் கிடைத்த பிறகு, எனது கலைப்படைப்புகளை சர்வதேச தளங்களுக்கு கொண்டு செல்ல நான் தயாராக இருக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!

“எனக்கு எப்போதுமே கலை மற்றும் இசையில் ஆர்வம் உண்டு, எனது குழந்தை பருவத்திலிருந்தே பல விருதுகளைப் பெற்றுள்ளேன். நான் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசியில் எழுத பயிற்சி செய்து வருகிறேன்.  அரிசி தானியத்தில் விநாயகர் வரைந்தேன், பின்னர் அரிசி தானியத்தில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு மைக்ரோ ஆர்ட் செய்யத் தொடங்கினேன், ”என்று ராமகிரி ANI இடம் கூறினார். 2019 ஆம் ஆண்டில், டெல்லி கலாச்சார அகாடமியிலிருந்து அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது மற்றும் இந்தியாவின் முதல் மைக்ரோ ஆர்ட்டிஸ்டாக அவருக்கு அங்கீகரம் அளிக்கப்பட்டது.

சட்ட மாணவியான ஸ்வரிகா, தான் ஒரு நீதிபதியாகி பல பெண்களுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.

ஸ்வரிகாவின் தாயார் ஸ்ரீ லதா, “எனது மகள் சிறுவயதிலிருந்தே கலை மற்றும் இசை மீது அதிக ஆர்வத்தை கொண்டிருக்கிறார். அவளுக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "

ALSO READ | ITR தாக்கல் செய்கிறீர்களா... அதற்கு முன் வரியை சேமிக்கும் 11 வழிகளை அறிந்து கொள்ளவும்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News