அலாரம் வைக்காமல் அதிகாலையில் எழுவது எப்படி? ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!

How To Wake Up Early In The Morning : பலருக்கு அலாரம் வைக்காமல் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள், என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 25, 2024, 05:39 PM IST
  • அதிகாலையில் எழ டிப்ஸ்
  • அலாரம் வைக்காமல் எழுந்து கொள்ளலாம்
  • என்ன செய்ய வேண்டும்?
அலாரம் வைக்காமல் அதிகாலையில் எழுவது எப்படி? ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்! title=

How To Wake Up Early In The Morning : காலையில் எழுந்து தனக்கான நாளை வேகமாக தொடங்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். அதிலும் ஒரு சிலர், 5 மணிக்கு எழ வேண்டும் என்று நினைத்தால் 4:30க்கு, பின்பு 4:45க்கு, இதையடுத்து 5 மணிக்கு என மூன்று அலாரமை வைத்து விட்டு உறங்குவர். அப்படி இருந்தும், ஒரு சில சமயங்களில் மொத்தமாக அலாரமை ஆஃப் செய்து விட்டு, நன்கு உறங்கி விட்டு 7 மணிக்கு எழுந்து கொள்வர். அதிகாலையில் எழுந்து கொள்ள முடியவில்லையே என ஒரு சிலர் தங்களை தாங்களே நொந்துக்கொள்வர். இப்படி, தங்களை தாங்களே திட்டிக்கொள்வதற்கு பதிலாக காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க சில விஷயங்களை அவர்கள் கடைப்பிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?

காலையில் சீக்கிரம் எழுவது நல்ல பழக்கம். ஏன் தெரியுமா?

அதிகாலையில் எழுவது என்பது மிகவும் கடுமையானதாக தோன்றினாலும், அதை செய்ய ஆரம்பித்தால் சீக்கிரமாகவே அது எளிதாகி விடும். நாம் அதிகாலை எழுவதால் நமது நாள் பெரும்பாலானோருக்கு முன்பாகவே தொடங்கி விடுகிறது. இதனால் நாம் செய்ய நினைக்கும் வேலைகளை சீக்கிரமாக செய்து, பல மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம். காலையில் சீக்கிரம் எழுவதால் கடினமான வேலை என நாம் நினைப்பவை கூட எளிதாகிவிடும். உடல், சர்காடியன் ரிதம் என்பதால் இயங்குகிறது. எனவே, அதை சரியாக வழிக்கு கொண்டு வந்தால் அலாரமே இல்லாமல் காலையில் சீக்கிரமாக எழலாம் என கூறப்படுகிறது. சரி, அதிகாலையில் அலாரம் இல்லாமல் எப்படி எழுவது என்பதை பார்க்கலாமா?

இயற்கை ஒளி:

வீட்டிலேயே 24 மணி நேரமும் இருந்து விட்டு, பின்பு காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வது என்பது பலருக்கு இயலாத காரியமாக இருக்கும். எனவே, தினமும் சூர்ய ஒளியில் உலா வருவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். காலையில் எழுந்து வெளியில் நடப்பது இதற்கு உதவலாம். எனவே, காலையில் எந்த நேரத்தில் எழுந்தாலும் அப்போது எழுந்து வெளியில் நடக்கலாம். 

உடற்பயிற்சி:

ஒரு சில நாட்களில், நம் உடலுக்கு உழைப்பே கொடுக்காமல் இருப்பதும் கூட உறக்கம் வராமல் இருப்பதற்கு காரணமாகலாம். எனவே, முடிந்தவரை தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதனால், நம் உடலுக்கு ஆற்றல் கிடைப்பது மட்டுமன்றி, இரவில் சரியான நேரத்திற்கு உறக்கமும் வரும்.

மேலும் படிக்க | இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்... உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது!

செல்போன் தூரமாக இருக்க வேண்டும்:

செல்போனில் இருந்து வெளிபடும் புளு வே கதிர்கள், உங்களின் தூக்கத்தை பாதிக்கலாம். எனவே, தினமும் உறங்கும் போது செல்போனை அருகில் வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். உறங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு செல்போன் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள். இது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், பின்பு பழகி விடும். 

இரவு உணவு:

நாம், இரவில் என்ன சாப்பிடுகிறோம் என்பது கூட நமது உறக்கத்தை கெடுக்கலாம். எனவே, உங்கள் நாளின் இறுதி உணவை தூங்க செல்வதற்கு முன்பு குறைந்தது 3 மணி நேரம் முன்பு சாப்பிட்டு விட வேண்டும். அது மட்டுமன்றி, இரவு தூக்கம் வரவில்லை என்றால் நொறுக்குத் தீனிகளையும் தவிர்க்கவும். 

வெளிச்சம் இருக்கும் அறை:

எப்போதும், நாம் காலையில் நம் மீது சூரிய ஒளி படும் அளவிற்கு வெளிச்சம் இருக்கும் அறையில் படுத்து பழக வேண்டும். அப்போதுதான், அலாரம் இல்லையென்றால் கூட சூரிய ஒளி பட்டவுடன் நம்மால் எழுந்து கொள்ள முடியும். 

மேலும் படிக்க | படுத்தவுடன் தூங்க வேண்டுமா..? இந்த 5 டிப்ஸை மட்டும் பின்பற்றினால் போதும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News