How To Stay Happy In Sad Situation : நம்மில் பலர், “இது கிடைத்தால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறி விடும், அது கிடைத்தால் இனி துன்பமே கிடையாது” என மனக்கோட்டை கட்டிக்கொண்டிருப்பர். ஆனால் உண்மையில், மகிழ்ச்சி, துன்பம், கோபம் என அனைத்து உணர்ச்சிகளுமே நம் மனதை பொருத்துதான் அமைகிறது. ஒரு சூழலுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம், அதை எப்படி கையாள்கிறோம் என்பதை வைத்துதான் நாம் எப்படிப்பட்ட நபர் என்றே நம்மால் கணித்துக்கொள்ள முடியும். ஒரு சிலர், தன் வாழ்வில் புயலே அடித்தாளும் அமைதியாக இருப்பர், ஒரு சிலர் தன் வாழ்வு நன்றாக சென்றால் கூட, “ஏதேனும் தீமை நடந்து விடுமோ” என்று பயந்து கொண்டே இருப்பர். ஒரு சிலர், சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும் கூட மனம் தளராமல் எப்படி அந்த சூழலை கையாள்வது என்று பார்க்க வேண்டும்.
வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன தடைகள்:
நம் வாழ்வில், முன்னேற்றத்தை தடுக்க பெரிதளவில் நம்மை நாமே நினைத்து பார்க்க முடியாமல் வருபவைக்கு பெயர்தான் தடைகள். இது, மனிதராய் பிறந்த அனைவருக்கும் வருவதுதான். ஆனால், இது போன்ற சோதனை காலம் வந்தால்தான் நம்மால் முழுமையான வாழ்வை வாழ முடியும் என பெரியவர்கள் கூறுகின்றனர். இது போன்ற தடைகளை எதிர்கொண்டால் ஒழிய, நம்மால் அடுத்து வரும் பெரிய பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். இது போன்ற தடைகளும் முட்டுக்கட்டைகளும் நம்மை தொடருவது போலவே தோன்றும், ஆனால் இவை நம்மை கடினமான மனிதராக மாற்றுவதற்கே வருகின்றன என்பது பின்னர்தான் புரியும்.
உங்களது நண்பராக நீங்களே மாறுங்கள்!!
உங்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிட்டு உங்களையே உங்களின் நல்ல நண்பராக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து, உங்களிடம் நீங்கள் நிறைய அன்பு செலுத்துங்கள். இதனால், உங்களுக்கு உங்களை அதிகமாக பிடிப்பதோடு மகிழ்ச்சியாக இருக்க வேறு நபரை நாட மாட்டீர்கள்.
சுய தைரியத்தை வளர்த்தல்:
உங்கள் தைரியத்தையும், சுய மரியாதையையும் அதிகப்படுத்தும் விஷயங்களை செய்யுங்கள். நன்றாக ஆடை உடுத்துவது, உங்களுக்கு பிடித்த வேலையை முழு மனதுடன் செய்வது போன்றவை உங்களை பற்றி நீங்களே நன்றாக உணருவதற்கு உதவும்.
மேலும் படிக்க | சிங்கிளாக இருக்கும் சிங்கப்பெண்ணா நீங்கள்? அப்போ ‘இந்த’ விஷயத்தில் உஷாரா இருங்க..
வாழ்க்கை மேல் நோக்கி போக...
உங்கள் வாழ்க்கை கீழ் நோக்கி சென்று கொண்டிருப்பது போல நீங்கள் உணர்ந்தால், அப்போதுதான் நீங்கள் மேலே செல்ல போகிறீர்கள் என்று அர்த்தம். "If You feel like going down, then there's no way other than going up" என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் இருக்கிறது. அதற்கு, மேற்கூறிய இரண்டு வரிகள்தான் அர்த்தம். உங்களுக்கு இருக்கும் மனக்கஷ்டம் எதுவாக இருப்பினும், அது உங்களால் கண்ட்ரோல் செய்யக்கூடிய விஷயமா என்று யோசியுங்கள். அப்படி இல்லை என்றால் அதை அப்படியே விட்டு விடுங்கள். உங்களால் எதை பார்க்க முடியுமோ, எந்த சூழலை உங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியுமோ அது வரை உங்கள் மனதை அதில் ஈடுபடுத்துங்கள். பிற சூழ்நிலைகள் அவற்றை அதவாகவே பார்த்துக்கொள்ளும்.
ஹெல்தியான லைஃப்ஸ்டைல்:
எண்ணெய் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது, இனிப்பு அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சரியாக டயட் இருப்பது, தினசரி உடற்பயிற்சி செய்வது போன்ற விஷயங்கள் உங்களது மனது மட்டுமல்ல, உடலையும் திடகாத்திரமாக வைத்துக்கொள்ள உதவும். எனவே, இந்த ஆரோக்கியமான லைஃப்ஸ்டைலை ஒரு மாதம் கடைப்பிடித்து பாருங்கள். உங்களுக்கு மாற்றம் தெரிந்தால், அதையே கடைபிடியுங்கள்.
மேலும் படிக்க | பெண்களை கவர்வது எப்படி..? சிங்கிள் பசங்களுக்கான சில டிப்ஸ் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ