How To Handle Office Politics : பள்ளி படிப்பிலும் சரி, கல்லூரி படிப்பிலும் சரி, ஒரு அலுவலகத்தில் நடக்கும் அரசியலை எப்படி கையாள வேண்டும் என யாருமே சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். வேலை பார்க்கும் இடத்தில், நீங்கள் எவ்வளவுதான் தவிர்க்க முயற்சித்தாலும் உங்களை தேடி ஏதேனும் ஒரு கிசுகிசு அல்லது தாக்குதல் வந்து கொண்டேதான் இருக்கும். இப்படி நடப்பது, ஒரு சமயத்தில் பொழுதுபோக்காக தோன்றினாலும், பல சமயங்களில் உங்களை வம்பில் மாட்ட வைத்து விடும். இதனால் மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவை உண்டாகலாம். எனவே, அலுவலக அரசியலை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
எந்த பக்கத்திலும் நிற்க கூடாது:
யாரேனும் உங்களிடம் வந்து உங்கள் பாஸ் குறித்து அல்லது வேறு யார் குறித்தும் கிசுகிசு பேசினால், தவறாக பேசினால் நீங்கள் அவருக்கு ஆதரவாக அல்லது எதிராக எதையும் பேசக்கூடாது. அது போன்ற பேச்சுகள் உங்களை நோக்கி வரும் போதே நீங்கள் உஷாராகி, அவர்கள் அந்த பேச்சை தொடர விடாதபடி நீங்கள் ரிப்ளை செய்யாமல் இருக்க வேண்டும். அவர்களிடம் ஈடுகொடுத்து பேசி, அவர்களை தூண்டி விட கூடாது. நீங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால், நாளை பிரச்சனை வரும் போது உங்கள் தலையும் உருளும்.
பதிவுகள்:
பல சமயங்களில், அலுவலக அரசியல்கள் பரவுவதற்கு காரணமாக இருப்பது, தொடர்பு இடைவெளி ஏற்படுவதால்தான். இதை தவிர்க்க, நீங்கள் அனைத்து மீட்டிங்கிளும் என்ன சொல்கிறிர்கள், நீங்கள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கிடைத்தது என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இது போன்ற முக்கியமான விஷயங்களை குறித்து வைத்துக்கொள்வதன் மூலம், உங்களுக்கு பின்னாளில் பிரச்சனை ஏற்படும் போது நீங்கள் இந்த ஆதாரங்களை வைத்து தப்பித்து கொள்ளலாம்.
சரியான நபர்களுடன் தொடர்பு:
அலுவலகத்தில், பெரும்பாலானவர்கள் பிறரை பற்றி கிசுகிசு பேசுபவர்களாகவும், பிறரை பற்றி பொய்யான தகவல்களை பரப்புவர்களாகவும் இருப்பர். அவர்களிடம் சென்றாலே ஏதோ ஒன்று நெகடிவ் ஆக இருக்கும். அவர்களை போன்றோரிடம் இருந்து எப்போதும் தள்ளி இருப்பது அவசியம் ஆகும். ஆனால், அலுவலகத்தில் நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களிடம் நட்பு பாராட்டாமலும் இருக்க முடியாது. அப்படி நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள், சரியானவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!
பாசிடிவான உறவுகள்:
உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன், பகைமையை வளர்த்து கொள்ளாமல், அவர்களை ஒரு எல்லை கோட்டுக்குள் நட்பு ரீதியாக வைத்திருக்க வேண்டும். இது, நீங்கள் இருக்கும் டீமில் என்று மட்டும் இல்லாமல், பிற குழுக்களில் இருந்தும் நண்பர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் அனைவரும் வந்து நிற்பர். அதே போல, அலுவலகத்தில் ஏதேனும் முக்கியமான விஷயங்கள் நடந்தாலும் அவர்கள்தான் தெரிவிப்பர்.
அமைதியுடன் உங்கள் வேலையை பாருங்கள்:
நீங்கள் வேலைக்கு செல்வது எதற்கு? என்பதை இது போன்ற கிசுகிசுக்கள் உங்களை தேடி வரும் போது யோசியுங்கள். அலுவலகத்திற்கு வந்தால், உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு, பிற டிராமாக்களை முடிந்த அளவிற்கு தவிர்த்து விடுங்கள். உங்களை பற்றி பிறர் என்ன பின்னாடி பேசினாலும், உங்கள் வேலை அனைத்து இடங்களிலும் பேச வேண்டும். மொத்தத்தில், நடிகர் விஜய் கூறியது போல, “உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா..வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்”
மேலும் படிக்க | பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ