PM Ujjwala Yojana: கடைசி வாய்ப்பு.. இலவச எரிவாயு சிலிண்டர் நன்மைகளைப் பெறுவது எப்படி?

2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டத்தின் மூலம் இன்றுவரை கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2020, 09:16 PM IST
PM Ujjwala Yojana: கடைசி வாய்ப்பு.. இலவச எரிவாயு சிலிண்டர் நன்மைகளைப் பெறுவது எப்படி? title=

Pradhan Mantri Ujjwala Yojana, Free Gas Cylinder: பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டரைப் பெற இது கடைசி மாதம். இந்த திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்தில் பிபிஎல் குடும்ப அட்டை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் இலவச சிலிண்டர்களை வழங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டத்தின் மூலம் இன்றுவரை கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு இலவச சிலிண்டர்கள் (Free Gas Cylinder) வழங்கப்படுகின்றன. நாட்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் ஏழை மக்கள், இந்த திட்டம் மூலம்  பயனடைந்து வருகிறார்கள். இது தவிர, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களின் நன்மையும் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்: இனிமையான செய்தி! LPG, CNG மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை குறைப்பு

கொரோனா நெருக்கடி காரணமாக, ஏப்ரல் மாதத்துடன் முடிவடை இருந்த இலவச சிலிண்டர்கள் வழங்குவதற்கான காலக்கெடுவை மத்திய அரசாங்கம் செப்டம்பர் மாதம் வரை நீட்டித்தது. எனவே இப்போது இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த மக்களுக்கு இந்த மாதமும் உள்ளது. 

இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம் அனைத்து தரப்பு குடும்பங்களையும் எல்பிஜி (Liquefied Petroleum Gas) சிலிண்டர் பயன்பாட்டுக்கு மாற்றுவதாகும், இது விறகு அடுப்பை விட மிகக் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு கவனம், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது, பிபிஎல் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, நீங்கள் ஒரு KYC படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள எல்பிஜி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்: PM Ujjwala Scheme கீழ் 4.5 கோடி பேருக்கு இலவச LPG.. அதிகரிக்கும் சிலிண்டர் எண்ணிக்கை

பதிவு செய்வதற்கு உங்களிடம் சில ஆவணங்கள் கேட்கப்படுகின்றன, அதன் பிறகு இந்தத் திட்டத்தில் (Pradhan Mantri Ujjwala Yojana) சேருவதன் மூலம் நீங்கள் எளிதாக சிலிண்டர்களை பெறலாம். மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிபிஎல் அட்டை, ஆதார் அட்டை, வயது சான்றிதழ், பிபிஎல் பட்டியலில் பெயர் அச்சு, வங்கி பாஸ் புத்தகத்தின் புகைப்பட நகல் மற்றும் ரேஷன் கார்டின் புகைப்பட நகல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்

Trending News