சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை நம்மில் பலர் இரவில் தாமதமாக தூங்கும் பழக்கத்திற்கு வந்து விட்டோம். மன அழுத்தம், அதிக வேலை போன்ற பல காரணங்கள் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக இருக்கின்றன. மனிதர்களை பொறுத்தவரை ஒரு நாள் தூக்கம் கெட்டுவிட்டாலும் அடுத்த நாளும் சரியான நேரத்தில் தூங்க முடியாமல் போகிறது. இந்த பிரச்சனையை எப்படி தடுப்பது என தெரியாமல் சிலர் விழி பிதுங்கி நிற்பதுண்டு. இதை எப்படி சரி செய்வது? இங்கே பார்ப்பாேம்.
தூங்காமல் இருப்பதற்கான காரணங்கள்..!
சிலருக்கு மனநலம் அல்லது உடல் நலனில் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் இரவில் தூங்குவதற்கு கொஞ்சம் சிரமப்படுவார்கள். இதன் காரணமாக தூக்கம் இரவில் அதிகம் தூங்காமல் இருந்து காலை சீக்கிரமாக எழ முடியாமல் தவிப்பர். ஒரு சிலர் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் பழக்கத்தை பின்பற்றாதவராக இருக்கலாம். அவர்களுக்கு இரவு சீக்கிரமாக தூக்கம் வருவது என்பது முடியாத காரியம். ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாக இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனையில் சிக்கி தவிப்பர். இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லாதோரும் தூக்கமின்மையை சந்திக்கின்றனர். தூக்கத்தை எப்படி சீக்கிரமாக வரவழைப்பது, சில ஈசி வழிமுறைகள் இதோ.
மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? எச்சரிக்கும் அறிகுறிகள் இவை தான்!
1.மன அமைதியை மேம்படுத்த..
பெரும்பாலான சமயங்களில் நம் மனம் ஆங்காங்கே அலைபாய்வதனால் தூக்கம் வராமல் போகலாம். இரவு தூங்குவதற்கு முன்னர் உங்களை அமைதிப்படுத்தும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுங்கள். பாட்டு கேட்பது அல்லது புத்தகம் படிப்பது என உங்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடுங்கள். உங்களுக்கு பிடித்த செயலை செய்வதனால் மனம் அமைதியாகும். இரவில் நல்ல உறக்கம் வரும்.
2.ஒரு நிலையான தூக்க அட்டவணையை அமைக்கவும்:
உங்கள் தூக்கத்தினை ஒழுங்குபடுத்துவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று நிலையான தூக்க அட்டவணையை உருவாக்குவது. வார இறுதி நாட்களில் கூட, தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சி, ‘சர்க்காடியன் ரிதம்’ எனப்படும் உங்கள் உடலின் உள் கடிகாரத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது. நீங்கள் ஒரு வழக்கமான தூக்கம்-எழுதல் சுழற்சியைப் பார்த்துக்கொள்ளும் போது உங்கள் உடல் இயற்கையாகவே அதற்கு ஏற்றவாறு பழகிவிடும். நாட்கள் ஆக ஆக, இதுவே உங்களுக்கு ஒரு நேரத்தில் தூக்கம் வர வழைப்பதற்கு எதவும்.
3.சாப்பிடுவதில் கவனம் தேவை..
நீங்கள் சாப்பிடுவதும் அருந்துவதும் உங்கள் தூக்கத்தின் அளவை பாதிக்கும். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக மாலை நேரங்களில். திடமான அல்லது காரமான உணவுகளை தவிர்க்கவும், ஏனெனில் அவை அசௌகரியத்தை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி உங்களுக்கு தூக்கம் வரவழைப்பதை கடினமாக்கும். கூடுதலாக, காஃபின் மற்றும் நிகோடின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். அதற்குப் பதிலாக, உறங்கும் முன் நீங்கள் பசியாக இருந்தால், ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு சிறிய கப் சூடான மூலிகை தேநீர் போன்ற ஒரு லேசான சிற்றுண்டியைத் தேர்வுசெய்யுங்கள்.
4.தியானம் செய்யுங்கள்:
அமைதியான சூழ்நிலையை தியானம் செய்வது நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தியானத்தை தூங்க செல்வதற்கு முன்பு செய்வதால் மனம் அமைதி பெற்று பதற்றத்தை தடுக்கும். உங்கள் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கும் மன அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகளையும் தியானம் நிவர்த்தி செய்யும்.
5.சூடான குளியல்:
தூங்குவதற்கு முன்னர் சூடான அல்லது மிதமான தண்ணீரில் குளியல் போடலாம். இது உங்கள் தசைகளை அமைதிப்படுத்தவும் உடலில் உள்ள சோர்வை நீக்கவும் வழி வகை செய்கிறது. இது நல்ல தூக்கத்திற்கு உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ