தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. இந்த சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஷூ மற்றும் செப்பல்களை தினசரி சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். ஏனெனில் சாலையில் இருக்கும் சகதியில் இவை அதிகம் அழுக்காகும். பின்னர் அவற்றை சரியாக உலர்த்துவது இன்னும் கடினம். ஆனால் கவலைப்பட வேண்டாம், தண்ணீர் இல்லாமல் உங்கள் ஷூ மற்றும் செப்பல்களை சுத்தம் செய்ய உதவும் சில உதவுக்குறிப்புகள் உள்ளன. மழைக்காலத்தில் குழந்தைகளின் காலணிகளை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும், குறிப்பாக வெள்ளை நிற காலணிகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவற்றை சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்தாலும், உலர்த்துவது சவாலாக இருக்கலாம். ஆனால் உங்கள் காலணிகளை சுத்தம் செய்வது மற்றும் உலர்த்துவது பற்றி நீங்கள் இனி கவலைப்பட வேண்டாம். அவற்றைக கழுவாமல் சுத்தம் செய்து புதிது போல இந்த உதவுக்குறிப்புகளை பின்பற்றுங்கள்.
மேலும் படிக்க | 5 நிமிடத்தில் பாத்ரூம் கமகமக்கும் வாசம் வீச இந்த 5 டிப்ஸ் பாலோ பண்ணுங்க
வெள்ளை நிற ஷூ அல்லது செப்பல்களை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரில் சிறிது பேஸ்ட் சேர்த்து நன்கு கலவையை உருவாக்கவும். பிறகு பழைய டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி காலணிகள் முழுவதும் இந்த கலவையை தேய்க்கவும், அதன் பிறகு அவற்றை ஈரமான துணியால் நன்கு துடைக்கவும். இரவு முழுவதும் பேனுக்கு கீழ் காலணிகளை உலர விடுங்கள். காலையில் நன்கு காய்ந்து புதிது போல தோற்றம் அளிக்கும். இதற்கு பெரிதாக தண்ணீரும் தேவைப்படாது. நீங்கள் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்தியும் அழுக்கு நிறைந்த காலணிகளை சுத்தம் செய்யலாம். இதற்கு இந்த கலவையை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல உருவாக்கி டூத் பிரஸ் உதவியுடன் நன்கு தேய்க்கவும். பின்னர் ஒரு துணியால் துடைக்கவும். தற்போது காலணிகளில் இருந்த அழுக்கு முற்றிலும் நீங்கி இருக்கும்.
மற்ற ஷூ மற்றும் செப்பல்களை விட வெள்ளை நிற அழுக்கு நிறைந்த ஷூக்களை சுத்தம் செய்வது சற்று கடினமாக இருக்கும். இதற்கு வெதுவெதுப்பான நீரில் சோப்பு கலந்து சோப்பு நுரை வரும் வரை நன்கு கலக்கவும். பிறகு டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி காலணி முழுவதும் இந்த கலவையை தேய்க்கவும், பின்னர் அவற்றை ஈரமான துணியால் துடைக்கவும். காலணிகளை முழுமையாக உலர விசிறியை பயன்படுத்தலாம். காலனிகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய மற்றொரு வழி, எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை டூத் பிரஸ் பயன்படுத்தி அழுக்கு நிறைந்த இடத்தில் தடவவும். பின்னர் சிறிது நேரம் கழித்து ஈரமான துணியால் துடைத்தால் அழுக்கு முற்றிலும் நீங்கும்.
மேலும் படிக்க | போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ