மேடை பேச்சாளராக மாற ஆசையா? ‘இதை’ தினமும் பயிற்சி செய்யுங்கள்!

How To Become A Public Speaker : நாம் மேடை பேச்சாளராக மாற வேண்டும் என்றால் சில பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Oct 4, 2024, 05:44 PM IST
  • மேடை பேச்சாளராவது எப்படி?
  • பயத்தை களைய டிப்ஸ்!
  • இதை செய்தால் தைரியமாக இருக்கலாம்..
மேடை பேச்சாளராக மாற ஆசையா? ‘இதை’ தினமும் பயிற்சி செய்யுங்கள்! title=

How To Become A Public Speaker : நம்மில் பலருக்கு, பயம் அனைத்தையும் விட்டெறிந்து விரைவில் மேடை பேச்சாளராக மாற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்போது நாம் தினமும் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? 

தினசரி பயிற்சி: 

எந்த விஷயத்தையும், எடுத்தவுடன் யாராலும் செய்து விட முடியாது. ஒரு திறனில் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினால், கண்டிப்பாக அதற்கான முயற்சிகளை தினமும் எடுத்துதான் ஆக வேண்டும். அதிலும் மேடை பேச்சு என்பது எளிதில் அனைவருக்கும் வந்துவிடாத ஒரு திறன். முதன் முறையாக பலரை எதிர்கொண்டு பேச வேண்டும் என்று யோசித்தாலே பயமாகத்தான் இருக்கும். எனவே, உங்கள் பயத்தை போக்க தினமும் கண்ணாடி முன் நின்று அல்லது வீடியோவாக ரெக்கார்ட் செய்து உங்கள் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பார்வையாளர்களை அறிதல்:

நீங்கள் எந்த வகையான பார்வையாளர்களை கவர விரும்புகிறீர்கள் அல்லது பேச விரும்புகிறீர்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். அவர்களுக்கு எந்த அளவிற்கு புரிதல் இருக்கிறதோ அந்த புரிதலின் அளவில்தான் உங்களது பேச்சும் இருக்க வேண்டும். 

கண்டண்ட் தொகுப்பு: 

உங்கள் பேச்சு, சரியான அறிமுகத்துடன் இருக்கிறதா, நீங்கள் பேச வரும் கருத்துகள் சரியாக இருக்கிறது, முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பவைகளை சரியாக தொகுத்துக்கொள்ள வேண்டும். இதனால், உங்கள் பேச்சு பலருக்கு புரிவதோடு, நீங்கள் சொல்ல வரும் விஷயமும் நிறைய பேரை சென்றடையும்.

காட்சிகள்:

நீங்கள் பலருக்கு வகுப்பு எடுக்க போகிறீர்கள், அல்லது ஒரு விஷயத்தை யாருக்காவது புரிய வைக்கும் பொருட்டு பேச போகிறீர்கள் என்றால் அதற்காக ஸ்லைட் ஷோவை தயார் செய்து கொள்வது மிகவும் நன்று. அப்போது, நீங்கள் கூறுவது புரியவில்லை என்றாலும், நீங்கள் வைத்திருக்கும் ஸ்லைட்ஸ்களை வைத்து பார்வையாளர்கள் புரிந்து கொள்வர். அது மட்டுமன்றி, இது போன்ற காட்சிகள் கையில் இருப்பது உங்களுக்கும் உதவி புரியும். 

உடல் மொழி:

மேடை பேச்சு மட்டுமல்ல, பிறருடன் பேசும் போது கூட உடல் மொழி மிகவும் முக்கியம். எனவே, உங்கள் பார்வையாளர்களுடன் அடிக்கடி eye contact வைப்பது, தைரியமாக நிற்பது ஆகியவை மிகவும் முக்கியமாகும். உங்கள் உடல் மொழி, நீங்கள் பயம் கொள்கிறீர்கள் என்பதை ஒரு போதும் காட்டிவிட கூடாது. 

மேலும் படிக்க | குழந்தைகள் முன் பெற்றோர் செய்யவே கூடாத விஷயங்கள்

பேசும் தன்மை: 

ஒருவருடன் நாம் தனிப்பட்ட முறையில் பேசும் போது, நாம் பேசும் தொனி வேறாக இருக்கும். ஆனால், மேடை பேச்சில் நாம் பேசும் தொனி வேறாக இருக்க வேண்டும். அப்போது நிறுத்தி நிதானமாக பேச வேண்டும். உங்கள் பார்வையாளர்கள், நீங்கள் பேசுவதை ஆழ்ந்து, புரிந்து கொள்ள வேண்டும் எனவே அதற்கு ஏற்றார் போல நீங்கள் பேச வேண்டும்.

விமர்சனம்:

நீங்கள் பேசியது எப்படி இருந்தது என்பது குறித்தும், இன்னும் எங்கெல்லாம் முன்னேற்றம் பெற வேண்டும் என்பது குறித்த விமர்சனத்தையும் பிறரிடம் இருந்து பெறுவது மிகவும் நல்லது. 

குழுக்கள்:

புத்தகம் படிப்பதற்கு, பாட்கேஸ்ட் ஆரம்பிப்பதற்கு என பல விஷயங்களுக்கு குழுக்கள் இருக்கின்றன. எனவே, அவற்றில் கலந்து கொண்டு உங்களை நீங்கள் முன்னேற்றிக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | குறட்டை சத்தம் ஓவரா இருக்கா? கட்டுப்படுத்த சூப்பரான பயிற்சிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News