வாழ்க்கையில நாமளும் கோடீஸ்வரன் ஆகலாம். இந்த சுலபமான வழியை பின்பற்றுங்க..

ஏழையா பிறக்கலாம். ஆனா ஏழையா சாகக் கூடாதுனு சினிமா வசனம் இருக்கு. அது உண்மைதான். கொஞ்சம் சாதூரியமா செயல்பட்டா எல்லாருமே கோடீஸ்வரன் ஆகலாம். அதற்கான வழிமுறைகள் இந்த கட்டுரையில..

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 1, 2022, 06:59 PM IST
  • வாழ்க்கையில் கோடீஸ்வரன் ஆவது எப்படி?
  • வாழ்நாள் முதலீடு உங்களை பணக்காரனாக்கும்
  • நம்ப முடியாத வகையில் நேரம் உங்களை மாற்றும்
வாழ்க்கையில நாமளும் கோடீஸ்வரன் ஆகலாம். இந்த சுலபமான வழியை பின்பற்றுங்க.. title=

எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கக்கூடிய ஒரு ஆசை “பணம் சம்பாதிக்கனும்” இன்னொன்னு “கோடீஸ்வரன் ஆகனும்”. பணம் சம்பாதிக்குறது ஒவ்வொருத்தரோட திறமையை பொறுத்தது. ஆனா கோடீஸ்வரன் ஆகுறது திறமையையும் தாண்டி, அவரவரோட முதலீட்டு சாதூரியத்தை பொறுத்தது. இதைத்தான் இத்தனை ஆண்டுகளா நம்மளோட பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த முன்னோர்கள் சொல்லிக்கிட்டே வந்திருக்காங்க. அதை எப்படி பண்றதுனு பார்க்கலாம்.

வாரன் பஃபெட் உலகத்தோட மிக முக்கியமான முதலீட்டாளர். அவர் ரொம்ப ஏழையா இருந்து சின்ன வயசுலயே முதலீட்டு பழக்கத்தை தொடங்கி ஒரு கட்டத்துல உலகின் நம்பர் 1 பணக்காரரா இருந்தாரு. அதுக்கு காரணம் சிறுதுளி பெருவெள்ளம்னு சொல்ற அவரோட சித்தாந்தம்தான். ஒரே ராத்திரியில யாராலயும் பணக்காரர் ஆக முடியாது. ஆனால் சிறுக சிறுக சேர்த்து கண்டிப்பா இறக்குறதுக்குள்ள கோடீஸ்வரன் ஆகலாம்.

மேலும் படிக்க | SBI வீட்டுக்கடன் விலைகள் உயர்ந்தன: ஜூன் மாத விலையுயர்வுகள்

நம்மால மாசம் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் அப்படிங்குறதும் அந்த பணம் எவளோ வளர்ச்சி அடையுதுங்குறதும் இதுல ரொம்ப முக்கியம். வாரன் பஃபெட் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பணத்தை 30% வளர்த்து இருக்காரு. அந்த வேகத்துல போனா ஒரு மாசத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே முதலீடு பண்ணி 11 வருஷத்துல கோடீஸ்வரன் ஆயிடலாம். அதே வேகத்துல போனா 25 வருஷத்துலயே 66 கோடி சம்பாதிச்சுடலாம். வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீடு பண்ணி 66 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும்னு யாருமே நம்ப மாட்டாங்க. 

Investment

ஆனா ஒரு சராசரி மனிதனால பணத்தை 30 சதவீதம் வளர்க்க முடியாது. வைப்புத் தொகையில வங்கிகள் இப்ப 5 சதவீதம் தான் குடுக்கறாங்க. அதற்கு மாற்றுத் திட்டம்தான் ஷேர் மார்கெட், மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், க்ரிப்டோ மாதிரியான விஷயங்கள். இதுல ரொம்ப பாதுகாப்பான நடைமுறை மியூச்சுவல் பண்ட். Index Fundல முதலீடு பண்ணா ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சி நிச்சயம். அப்படி முதலீடு பண்ணா நீங்க எப்ப கோடீஸ்வரன் ஆக முடியும்னுதான கேக்குறீங்க!

மேலும் படிக்க | பிரதமர் காப்பீட்டுத் திட்டம்; 7 ஆண்டுகளுக்கு பின் பிரீமியத்தில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல்

மாசத்துக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்யக்கூடிய ஒரு சராசரி மனிதனால 23 ஆண்டுகள்ல கோடீஸ்வரன் ஆக முடியும். மாதம் 20 ஆயிரம் ரூபாய் முதலீடு பண்ணா 17 ஆண்டுகள்ல ஒரு கோடி ரூபாயை தொட்டுடலாம். 30 ஆயிரம் ரூபாய் முதலீடு பண்ணா 14 ஆண்டுகள்ல கோடீஸ்வரன். முதலீட்டுக்கு பொறுமைதான் முக்கியம். எந்த சலசலப்புக்கு அசராம நிதானமா முதலீடு செஞ்சுக்கிட்டே இருந்தா கோடிகள் உங்கள் கைகள்ல.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News