ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்துக்கொள்ளலாம்? ரிசர்வ் வங்கி கூறுவது என்ன?

Bank Account: ஒருவருக்கு எத்தனை வங்கிக் கணக்குகள் இருக்கலாம் என ஏதாவது கணக்கு உள்ளதா? ஒரு இந்தியர் தன்னிடம் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியும்?  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 26, 2023, 04:15 PM IST
  • வங்கிக் கணக்கு திறப்பதற்கான விதிகள்.
  • எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்?
  • பல வங்கிக் கணக்குகள் இருப்பதன் தீமைகள்.
ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்துக்கொள்ளலாம்? ரிசர்வ் வங்கி கூறுவது என்ன? title=

வங்கிக் கணக்கு திறப்பு: இன்றைய காலகட்டத்தில் பண பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு இருப்பது மிகவும் அவசியம். வங்கிக் கணக்கு இல்லாமல் பெரிய பரிவர்த்தனைகளைச் செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் உள்ளனர். இந்த வங்கிக் கணக்குகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திறக்கப்படுகின்றன. சிலர் பல வங்கிக் கணக்குகளை திறந்து விடுகிறார்கள், ஆனால் அவர்களால் இவற்றை பராமரிக்க முடிவதில்லை. ஒருவருக்கு எத்தனை வங்கிக் கணக்குகள் இருக்கலாம் என ஏதாவது கணக்கு உள்ளதா? ஒரு இந்தியர் தன்னிடம் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியும்? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? இந்த விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வங்கிக் கணக்கு திறப்பதற்கான விதிகள்

நாட்டில் பல வகையான வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம். சேமிப்பு வங்கி கணக்கு, நடப்பு வங்கி கணக்கு மற்றும் சம்பள வங்கி கணக்கு ஆகியவை இதில் அடங்கும். ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் அதன் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நோக்கங்களை நிறைவேற்ற எந்த கணக்கு சரியாக இருக்குமோ அதை திறக்கலாம். இருப்பினும், எத்தனை வங்கிக் கணக்குகளை நாம் வைத்திருக்க முடியும் என்பதில் மக்களிடையே சந்தேகம் உள்ளது. 

எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்?

ஒருவர் இந்தியாவில் எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். திறக்கப்படும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. நீங்கள் வைத்திருக்க வேண்டிய வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் எந்த வங்கியும் எந்த வரம்பும் நிர்ணயிக்கவில்லை. இருப்பினும், அதிக வங்கிக் கணக்குகளை பராமரிப்பது கடினமாக இருப்பதால், மக்கள் சில வங்கிக் கணக்குகளை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | UPI Lite: பின் நம்பர், இன்டர்நெட் இல்லாமல் இனி இவ்வளவு தொகையை நீங்கள் அனுப்பலாம்!

பல வங்கிக் கணக்குகள் இருப்பதன் தீமைகள்

உண்மையில், வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட தொகை, அதாவது குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை வங்கிக் கணக்கில் வைக்கவில்லை என்றால், அதற்கு அபராதமும் விதிக்கப்படலாம். இதனுடன், வங்கிகளால் வாடிக்கையாளர்கள் மீது பல்வேறு கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. மொபைலில் எஸ்எம்எஸ் வசதி, ஏடிஎம் கட்டணம் போன்றவை இதில் அடங்கும். வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், இந்தக் கட்டணங்கள் உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தும், உங்களுக்கு மிகவும் தேவையான அளவு வங்கிக் கணக்குகளை மட்டும் வைத்திருப்பது நல்லது என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

கூடுதல் தகவல்

கடன் விகிதங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் EMI அடிப்படையிலான தனிநபர் கடன்களுக்கான ஃப்ளோட்டிங்க் வட்டி விகிதங்களை மீட்டமைக்க புதிய விதிகளை வெளியிட்டது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, வங்கிகள் மற்றும் NBFCகள் உட்பட அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களும் (REs), பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது கடனின் EMI, கடன் காலம் அல்லது இரண்டையும் பாதிக்கும் என்பதை கடன்களை வாங்கும் நேரத்தில் கடன் வாங்குபவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். 

ரிசர்வ் வங்கி தெரிவித்தது என்ன?

வட்டி விகிதங்கள் காரணமாக EMI அல்லது கடன் காலம் அல்லது இரண்டிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் தகவல் சரியான வழிகள் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 60 வயசுக்காரங்களுக்கு குட் நியூஸ்! வங்கி டெபாசிட்களுக்கு 9% வட்டி தரும் வங்கிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News