104 கிலோவில் இருந்து கட்டுமஸ்தான தேகத்திற்கு மாறிய கார்த்தி-சீக்ரெட் என்ன?

Karthi Weight Loss Tips: நடிகர் கார்த்தி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஓவர் வெயிட்டாக இருந்தார். பின்பு உடல் மெலிந்தார். இதற்கான வெயிட் லாஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 16, 2023, 07:59 PM IST
  • கார்த்தி முன்னர் 104 கிலோ இருந்தாராம்.
  • அதை குறைக்க முடியாததால் மன அழுத்தத்திற்கு ஆளானாராம்.
  • கார்த்தி வெயிட் லாஸ் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
104 கிலோவில் இருந்து கட்டுமஸ்தான தேகத்திற்கு மாறிய கார்த்தி-சீக்ரெட் என்ன? title=

திரைத்துறை குடும்பத்தில் இருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், கார்த்தி. இவரது சகோதரர் சூர்யாவும் தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகின்றனர். இவர், நடிக்க வருவதற்கு முன்பு அதிக எடையுடன் இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 
16 வருட திரை வாழ்க்கையை கம்பளீட் செய்த கார்த்தி..

நடிகர் சிவகுமாரின் மகனும், சூர்யாவின் சகோதரருமான கார்த்தி, ஆயுத எழுத்து படத்தில் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அந்த படத்தில் துணை நடிகராகவும் வருவார். 2007ஆம் ஆண்டு பருத்தி வீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுமானார். முதல் படமே ஏறுமுகமாக இவருக்கு ஏற்றத்தை கொடுத்தது. வாட்ட சாட்டமான உடலுடனும், பெண்களுக்கு பிடித்த அழகுடனும் இருந்த இவரை, பலர் கணவு கண்ணனான இருக்கிறார். 

மேலும் படிக்க | Sai Pallavi: அடேங்கப்பா..மேக்-அப் போடாமலும் சாய் பல்லவி இத்தனை அழகா இருக்க இதுதான் காரணமா?

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்தார், ஜப்பான் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. கார்த்தி, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது, தனது கடந்த கால வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

ஓவர் வெயிட்டாக இருந்த கார்த்தி..

கார்த்தி, தான் கலந்து கொண்ட நேர்காணலில் உடல் எடை அதிகமாக இருந்த போது எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது, தான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு 104 கிலோ எடையுடன் இருந்ததாகவும் அப்போது தன்னை பார்ப்பவர்கள் அனைவரும் டெடி பியரை பார்ப்பது போல பார்ப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும் தன்னால் உடல் எடை குறைக்க முடியாததால் மன அழுத்தத்திற்கு ஆளானதாக அவர் கூறியிருக்கிறார். 

வெயிட் லாஸ் டிப்ஸ் கொடுக்கும் கார்த்தி..

கார்த்தி, தான் உடல் எடையை குறைக்க என்ன முயற்சி மேற்கொண்டார் என்பதையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கார்த்திக்கு அவ்வளவு எளிதாக உடல் எடை குறையாதாம். அதனால் அவர் வெயிட் லாஸ் முயற்சியில் இறங்கியவுடன் எளிதில் ரிசல்ட் கிடைக்காமல் இருந்துள்ளது. இதையடுத்து, சிறிது ஆராய்ச்சி செய்த பிறகு தனது உணவு பழக்கங்களை மாற்றியதாக கார்த்தி கூறியிருக்கிறார். தனது டயட்டில் கவனம் செலுத்த தொடங்கியதாகவும் அதை கரெக்டாக மெயிண்டெயின் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். நம் உடல் 70 சதவிகிதம் நாம் என்ன சாப்பிடுகிறோமோ அடை வைத்து குறையும் என கூறும் கார்த்தி, எஞ்சியுள்ல 30 சதவிகிதம் நமது வர்க் அவுட்டால் குறையும் என கூறுகிறார். இந்த புரிதல் வந்தவுடன்தான் கொஞ்சம் கொஞ்சமாக தனது உடல் எடை குறைய ஆரம்பித்ததாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | Trisha: ‘இது தெரியமா போச்சே..’ த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம் இதுதானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News