Electric Scooter சந்தையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Honda வின் Benly e

ஹோண்டா பென்லி இ முக்கியமாக உணவு விநியோக மற்றும் இணையவழி விநியோக நிறுவனங்களால் பயன்படுத்தப்படக்கூடும் ஒரு மொப்பட் என்பதால், இந்த பைக் ARAI சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2021, 06:05 PM IST
  • ஹோண்டவின் மின்சார ஸ்கூட்டரான (Electric Scooter) பென்லி இ விரைவில் இந்திய சாலைகளில் காணப்படும்.
  • ஹோண்டா பென்லி இ எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் துணை பவர் சாக்கெட் ஆகியவற்றுடன் வருகிறது.
  • ஹோண்டா பென்லி இ முக்கியமாக உணவு விநியோக மற்றும் இணையவழி விநியோக நிறுவனங்களால் பயன்படுத்தப்படக்கூடும்.
Electric Scooter சந்தையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Honda வின் Benly e title=

Honda Benly e: இந்தியாவில் போக்குவரத்துத்துறையில், புதைபடிவ எரிபொருளிலிருந்து மின்சார வாகனங்களுக்கான மாற்றம் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பல அட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் மின்சார இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன. 

இந்த பட்டியலில் தற்போது ஹோண்டவின் மின்சார ஸ்கூட்டரான (Electric Scooter) பென்லி இ-யும் சேரவுள்ளது.

 ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா விரைவில் தனது மின்சார ஸ்கூட்டரான பென்லி இ-ஐ (Benley e) அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மினசார வாகனத்துக்கான சோதனைகள் இந்திய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி சங்கத்தில் (ARAI) நடைபெற்று வருகின்றன. 

பென்லி இ மாதிரிகள்

ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா (Honda) தற்போது பென்லி இ- இன் நான்கு வெவ்வேறு மாடல்களை ஜப்பான் மற்றும் இ-ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிற நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாதிரிகள் பென்லி இ I, பென்லி இ I புரோ, பென்லி இ II மற்றும் பென்லி இ II புரோ ஆகியவையாகும். இ-ஸ்கூட்டர்களின் ப்ரோ வகைகள் முன்பக்கத்தில் ஒரு பெரிய சேமிப்பு கூடை மற்றும் ஒரு பெரிய பின்புற கேரியர் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருகின்றன.

2021 இல் அறிமுகம் ஆகுமா?

இந்தியாவில் அறிமுகவாகவுள்ள ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பென்லி இ-யின் சோதனைகள் இந்திய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி சங்கத்தில் (ARAI) நடைபெற்று வருகின்றன. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ஹோண்டா 2021 ஆம் ஆண்டிலேயே இந்த இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தக்கூடும்.

ALSO READ: Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!

ARAI சோதனை என்றால் என்ன?

தினசரி பிக் அப் மற்றும் விநியோக சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான சோதனைகளை ARAI செய்கிறது. ஹோண்டா பென்லி இ முக்கியமாக உணவு விநியோக மற்றும் இணையவழி விநியோக நிறுவனங்களால் பயன்படுத்தப்படக்கூடும் ஒரு மொப்பட் என்பதால், இந்த பைக் ARAI சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பென்லியின் இ-யின் அம்சங்கள்

ஹோண்டா பென்லி இ எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் துணை பவர் சாக்கெட் ஆகியவற்றுடன் வருகிறது என்று ருஷ்லானின் அறிக்கை கூறுகிறது. இந்த பைக்கில் ஒரு பிளாட் ரியர் டெக் மற்றும் முன்புறத்தில் 60 கிலோ வரை சுமக்கக்கூடிய ஒரு பெரிய கூடை  ஆகியவை உள்ளன. ரிவர்ஸ் அசிஸ்ட் செயல்பாடு, ஸ்கூட்டரை (Scooter) குறுகிய பாதையிலும் செலுத்த உதவுகின்றன. ஸ்கூட்டரின் 12 அங்குல முன் டயர் 90/90 பிரிவையும், 10 அங்குல பின்புற சக்கரம் 110/90 பிரிவையும் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் எடை சுமார் 125-130 கிலோ ஆகும்.

பென்லியின் இ-யின் செயல்திறன் 

பென்லி இ I மற்றும் I புரோ-வில் 2.8 கிலோவாட் (3.8 பிஎஸ்) மின்சார மோட்டரைக் கொண்டுள்ளன. இவை 13 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டவை. பென்லி இ II மற்றும் II ப்ரோ 4.2 கிலோவாட் (5.7 ஹெச்பி) மின்சார மோட்டருடன் வருகின்றன. இவை 15 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டவை. இந்த மாறுபாடு மணிக்கு 43-60 கிமீ வேகத்தை வழங்குகிறது.

ALSO READ: Ola Electric Scooter: அட்டகாச அம்சங்களுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News